|
வன்னி,
கிளிநொச்சி மேற்கு ஆனைவிழுந்தான் குளத்தினுள் 2000 ஆண்டுகளுக்கு
முற்பட்ட சுடுமண் உருவச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
ஆனைவிழுந்தான் குளத்துக்கு நீர் வழங்கும் ஆற்றின் நீர்தேங்கும்
பகுதியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் குள அணைக்
கட்டுமாணத்துக்காக புல்டோசரால் மண் அள்ளப்படுகையில் மண்படையில்
மேலிருந்து சுமார் 3 அடி ஆழத்தில் சுடுமண் சிற்பங்கள்
எடுக்கப்பட்டன.6 அங்குலம் முதல் ஒன்றரை அடி உயரம் வரையான பெண்
உருவச் சிலைகளின் பாகங்கள் எடுக்கப்பட்டன.
படங்களில் பெண் உருவச் சிலைகளின் கைகள், மார்பகங்கள், முகம்,
தாடை, சலங்கை அணிந்த கால்பாதம், தலைகளை இழந்த 6 அங்குல உயர பெண்
உருவம், ஆபிரிக்க பழங்குடிகளின் சிற்பக்கலையை நினைவூட்டும் 6
அங்குல உயர குடுமியுடனான சுடுமண் சிற்பம் என்பன
கண்டெடுக்கப்பட்டவற்ற்pல் ஒரு தொகுதியில் உள்ளன.
|