www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

சுடு மண் இலச்சினைகள்

வன்னி கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் அலைகரைப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் தொல்கால சுடு மண் இலச்சினைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

குறித்த பகுதியில் பல தொல்கால ஈமச்சின்னக் கட்டுமாணங்களைக் கண்டுபிடித்த ந. குணரட்ணம் மேலும் இப்பகுதியில் தேடலை மேற்கொண்டபோது உடைந்த மட்பாண்டத் துண்டுகளுடன் இலங்கையின் ஆரம்ப கால நாணயமான லக்குமி பிளேக் நாணயங்களும் வட்ட வடிவ சுடுமண் இலச்சினைகளும் எடுக்கப்பட்டன.

இவற்றை நாணய அச்சுக்கள் என சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற போதிலும் அறிவியல் நடை முறைகளின் ஊடான நோக்கில் சுடுமண் அச்சில் ஒரு தடவை மட்டுமே உலோகத்தை வார்க்க முடியும்.

ஒரு தடைவையுடன் மண் அச்சு சிதைந்துவிடும். மறுதடவை அதில் உலோகத்தை வார்க்க முடியாது. தமிழர் பண்பாட்டில் இரும்பு உலோகப் பயன்பாட்டின் பின்னரேதான் நாணயப்பயன்பாடு தொடங்கியதால் நாணய அச்சாக இரும்பு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இங்;கு படங்களில் வட்ட வடிவ மண் இலச்சினைகளும் அவற்றின் நெகிள்களி பிரதிமைகளையும் காணலாம்.தொல்லியல் தேடலாளார் நு. குணரட்ணம் குழுவினர் இவற்றைச் சேகரித்துள்ளனர்.

 

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]