www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page  

சூடான சினி  தகவல்கள்        உடன் செய்திகளுக்கு

கில்லி வெற்றிப்படம் -விஜய் கொண்டாட்டம்!

''இதுவரைக்கும் பார்க்காத வசூலை பார்த்துவிட்டோம்'' என்று விஜயின் வீட்டிற்கே போன் செய்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள். ''இப்படிப்பட்ட ஒரு வெற்றியை எதிர்பார்த்திருப்பாரா விஜய்?''

''எனக்கு வசூல் பற்றியெல்லாம் கணக்கு தெரியாதுங்க. ஒரு திருப்தியான படம் கொடுத்திருக்கேன். அவ்வளவுதான். தெலுங்கில் வந்த கில்லியை பார்க்கும்போதே தெரியும். இது ஒரு வெற்றிப்படமா இருக்கும் என்று! நான் நினைச்சா மாதிரியே இது அமைஞ்சிருக்கு. இந்த யூனிட்லே எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டோம்.படப்பிடிப்பு நேரத்தில் ஆக்ஸிடெண்ட் ஆச்சு. இன்னும் சொல்லப்போனா கேமிராமேன் கோபிநாத் பிழைச்சதே ஆச்சர்யம். அந்த கஷ்டத்திற்கெல்லாம் இப்போ பலன் கிடைச்சிருக்கு'' என்கிறார் விஜய்.

கமலின் அடுத்த படங்கள்! -08.11.2003

'சண்டியர்'க்குப் பிறகு கமல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் மீண்டுமொருமுறை நடிக்கவுள்ளார்.07-11-2003கமல் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.அப்பொழுது நிருபர்களிடம் பேசியபொழுது தனது அடுத்த ப்ராஜெக்ட்களை அறிவித்தார்."இரண்டு படங்கள் முடிவாகிவிட்டது.டைட்டில் இப்போதைக்கு சொல்லப்போவதில்லை.ஆனால் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 'கிருஷ்ணலீலா' என்ற படத்தில் நடிக்கவுள்ளேன்"என்றார் கமல்.

கமலும்,சிங்கீதம் சீனிவாசராவும் இணைந்து 'மைக்கேல் மதன காம ராஜன்','காதலா காதலா' போன்ற மறக்கமடியாத காமெடி படங்களை அளித்துள்ளார்கள்.இவ்விருவரும் மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு நிச்சயம் கொண்டாட்டமான செய்தியாக இருக்கும்.

ரஹ்மான் சாதனைகள் தொடர்கிறது!

பாம்பே ட்ரீம்ஸ் நாடகத்திற்கு இசையமைத்து இசை உலகின் கவனத்தை ஈர்த்த ரஹ்மான் மேலும் ஒரு சாதனையாக 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' நாடகமாக்கப்படுவதற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' நாடகத்தின் இயக்குனரான கெவின் வேலஸ் இத்தகவலை தெரிவித்தார். ரஹ்மான் இசையில் மெலடியும் புதுமையும் கலந்திருப்பதால் இந்த ப்ராஜக்டை அவருக்கு அளித்ததாக கூறினார்.

ரஹ்மானும் வெர்ட்டினாவும் இணைந்து 'லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' கதைக்கு இசையமைக்கவுள்ளனர். இக்கதை ஹாலிவுட்டில் படமாக தயாரிக்கப்பட்டு வசூலில் சாதனை படைத்ததை தொடர்ந்து அடுத்ததாக மேடையேறவுள்ளது.

ரஹ்மான் இசையமைப்பதன் மூலம் ஆசியப் பகுதிகளில் இசையும் நாடகமும் வர்த்தக ரீதியாக வெற்றியடைய வாய்ப்புகள்ளதாக கெயின் வேல்ஸ் மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.

 செய்திகள்

கிசு கிசு

விமர்சனம்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]