www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

சினிமா செய்திகள்

சுந்தர் சி. கோபிகா இணையும் 'யாழ்ப்பாணம்'

- 26.10.2006: cinesouth
ஆகவே சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இயக்குனர் சுந்தர் சி. மீண்டும் மேக்கப் போடுகிறார்!


'ரெண்டு' படத்தில் பிஸியாக இருப்பவர் கிடைக்கிற 'கேப்'பில் இளங்கண்ணனுடன் டிஸ்கஷனில் இறங்கிவிடுகிறார். இளங்கண்ணன்? அர்ஜூன் நடித்த 'ஒற்றன்' படத்தை இயக்கியவர். சுந்தர் சி. நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறவர்.


'தலைநகரம்' படத்தின் விநியோக உரிமையை வாங்கிய ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 'தலைநகரம்' படத்திற்கு கதாநாயகியை தேடோ தேடென்று தேடி கடைசியில் குஷ்புவின் ரெகமன்டேஷனில் சுந்தர் சி.க்கு ஜோடியானார் ஜோதிர்மயி. இந்த முறை சுந்தர் சி.யுடன் சேர்ந்து நடிக்கப் போகிறவர் கோபிகா!



புதிய படததில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். புலனாய்வு செய்யப் போகிறார் என்றெல்லாம் சுந்தர் சி.யின் கேரக்டர் பற்றிஏகப்பட்ட பில்டப்புகள். அதற்கேற்ற மாதிரி படத்துக்கு 'யாழ்ப்பாணம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.


'ரெண்டு' படம் அடுத்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது. அதையடுத்து டிசம்பரில் 'யாழ்ப்பாணம்' படத்தின் ஷூட்டிங். யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே 'கன்' ஷூட்டிங் நடப்பதால் இந்த 'யாழ்ப்பாணத்தில்' எதை ஷூட் செய்யப் போகிறார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்

அனுப்பியவர் Admin

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]