|
இலங்கையின் தேர்தல்
திகதிக்கு சில வாரங்களுக்கு முன்னதாக இலங்கை வானொலியில் தினமும்
மாலை நேர ஒருமணி நேர ஒலிபரப்பாக பிரித்தானிய
ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம்(TBC)என்ற பெயரில் திடீரென முளைத்த
பிரித்தானியாவில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி ஒன்று
தமிழ்த்தேசியத்துக்கு எதிரான விசமத்தனமான பிரச்சாரங்களை செய்து
வருகின்றது.
இவர்கள் தாம் ஏதோ
தமிழ் மீது அதீத பற்றுக்கொண்டவர்கள் போல தமிழ் உணர்ச்சிபாடலின்
பகுதிகளை இடையிடையே ஒலிபரப்பி பிரதேசவாத்துக்கு ஆதரவாகவும்
தமிழ்த்தேசியத்துக்கு எதிராகவும் திட்டமிட்ட முறையில்
பிரச்சாரங்களை கட்டவிழ்த்து
விட்டிருக்கின்றார்கள்.ஒலிபரப்பாளர்கள் தமிழை அடிக்கடி
விழுங்குவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.இவர்களது
நடவடிக்கைகள் எரிகிற வீட்டில் எண்ணை ஊற்றுவது போல் இருப்பதாக
விசனம் தெரிவிக்கப்படுகின்றது.இந்த ஒலிபரப்பு சந்திரிகாவினால்
ஊடகத்துறை அமைச்சு கதிர்காமருக்கு வழங்கப்பட்ட பின்னர்தான்
முளைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்ஒலிபரப்பு ஆரம்பமானதும் வர்த்தக நிலையங்கள்
சாப்பாட்டுக்கடைகள் உட்பட பலதரப்பினரும் வேறு வானொலிக்கு
மாற்றிவிடுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.இவ்வாறானதொரு
ஒலிபரப்பு மக்கள் குரல் என்ற பெயரில் இலங்கை வானொலியில் முன்னொரு
பொழுது ஒலிபரப்பாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.தமிழ்மக்களை
திசை திருப்ப இலங்கை அரசாங்கம் அவ்வப்பொழுது அவர்களது
அடிவருடிகளான தமிழர்கள் சிலரையே பாவிப்பது பலரும் தெரிந்ததே.
இவ்வாறான நடவடிக்கைகளில் துணைபோகும் அடிவருடிகளை வரலாறு
ஒருபோதும் மன்னிக்காது என்பது கடந்தகாலங்களில்
உணரப்பட்டதே.தமிழ்தேசியத்தின் அண்மைத்திய தேர்தல் மூலமான
ஒருமித்த தீர்ப்பின் பின்னரும் மேற்போந்தவர்கள் தமது
அற்பத்தனமான நடவடிக்கைகளை தொடர்வது பற்றி மக்கள் மத்தியில்
வெறுப்பேற்றியுள்ளது.
இதனிடையே மேற்படி ஒலிபரப்பில் ஒலிபரப்பாளராக அண்மையில்
ஒலிபரப்புச்சாதனையை உலகத்தமிழர்கள், ஊடகங்கள் ஆதரவுடன் செய்த
பெண் ஈடு பட்டிருப்பதனால் முன்னர் இவரது சாதனையினை ஊக்குவித்த
தமிழ் உறவுகள் கோபமடைந்திருக்கின்றனர்.அண்மையில்
இணையத்தளவானொலியான ஈரிபிசி வானொலியில்
திறந்த கதவுகள் அரசியல் கலந்துரையாடலில் நேயர் ஒருவர் இவரை
வானலை விபச்சாரி என கடிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி
அறிவிப்பாளரின் சாதனையினை எமதுதளமும் வாழ்த்தி
செய்தி
வெளியிட்டிருந்தது.இவருடைய தற்போதைய செயல்பாடு காரணமாக, நாம்
அதற்காக வெட்கித்தலைகுனிகின்றோம்.தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாக
குரல் கொடுக்கும் ஊடகம் என்ற ரீதியில் எமது கண்டணங்களை மேற்படி
வானைாலிக்கெதிராக தெரிவிக்கின்றோம். |