www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

எல்லாம் பெற்றோர் கையில்

இளம்பெண் தனியாகவோ அல்லது பெண்களுடன் சேர்ந்தோ வீதியில் செல்லும்பொழுது பல இளம் வயது ஆண்களாலோ அல்லது நடுத்தர வயது ஆண்களாலோ கேலிப் பேச்சுக்களுக்குள்ளாக்கப்படுவது இன்று சாதாரணமாக நிகழ்கின்றது.ஆண்கள்,பாலியல் ரீதியாகப் பெண்களைக் கிண்டல் செய்வது,அவர்கள் மனம் நோகும்படி பேசுவது,அருவருக்கத்தக்க பாடல்களைப் பாடுவது,சாயத் தண்ணிகளை பெண்கள் மேல் தெளிப்பது,அவர்களின் உடைகளை இழுப்பது,வேண்டுமென்றே அருகில் வந்து இடிப்பது போன்ற பல ரகளைகளைச் செய்கிறார்கள்.

இதற்கு மூல காரணம் இவ்வாறான ஆண்களின் குடும்பங்களே.குடும்பங்களில் பெண் பிள்ளையை ஒரு விதமாகவும் ஆண் பிள்ளையை வேறு விதமாகவும் நடத்துகின்றனர்.பெண் என்றால் தன் வீட்டில் முடங்கிக் கிடக்கவேண்டும் என்ற வகையில் தான் பலர் தம் பெண் பிள்ளைகளை வளர்க்கின்றனர்.இதனால் ஆண் பிள்ளையின் மனதில் பெண் என்பவள் வீட்டுவேலை செய்யவும்,கணவனுக்குப் பணிவிடை செய்யவும் ஆண்களிடம் அடங்கியிருப்பதற்கும்தான் பிறப்பெடுத்திருக்கிறார் என்ற தவறான அப்பிப்பிராயம் தோன்றிவிடுகின்றது.

இவ்வாறான கோணத்தில் பெண்ணை நோக்கிய ஆண்களுக்கும் பெண்கள் படிப்பதும்,வேலைக்குச் செல்வதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அதாவது அடங்கி,ஒடுங்கி இருக்கவேண்டிய பெண்களுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதே,அவர்களின் நடமாட்டம் நசுக்கப்படவேண்டும் என்ற கீழ்த்தரமான புத்தி தோன்றுகின்றது.ஆண்களின் இவ்வாறான புத்தியே பெண்களை கேலிப்பேச்சிற்கு ஆளாக்குகின்றது.

வெளியிடங்களில் ஆண்களால் இடைஞ்சல் ஏற்பட்டாலும் பெண்கள் வீட்டில் வந்துகூறப் பயப்படுகின்றனர்.காரணம் நாளையிலிருந்து நீ தனியாகப் படிக்கப்போகவேண்டாம்,மேற்கொண்டு படிக்கவேண்டாம்,வீட்டிலேயே இருந்துபடி என குடும்பத்தவர்கள் பெண்களை முடிக்கி விடுகின்றனர்.உண்மையான பாசமுள்ள குடும்பத்தவர்களாக இருந்தால் பெண்களின் உரிமைகளை நசுக்கவோ ஒடுக்கவோ கூடாது.அவளிலிருந்து அச்சத்தை விலக்கி வாழ வழிவகுத்துக்கொடுங்கள்.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]