www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

அம்பலமாகின்றது இன்னுமொரு சதி-01
யாழிலிருந்து குரு  மூலம்:தமிழ்நாதம் (பாகம்01  பாகம்02 பாகம்03)

யாழ்ப்பாணம் 22.06.2004

உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் எல்லோரும் தங்களின் எதிர்கால சுதந்திர வாழ்வைப்பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்க தமிழர்களின் மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றும், இன்றைய போராட்டத்தின் உயிர்நாதமுமாகிய கல்வியை அழிக்க முனையும் சக்திகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போராட்டம் இன்றைய கால கட்டத்தில் மிக முக்கியமானது.

கடந்த 14.06.2004 முதல் யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக அங்கு பணிபுரியும் ஊழியர்களால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை முற்றுமுழுதாக தரப்படுகின்றது.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்;கலைக்கழகம்

பல்கலைக்கழக சமூகத்தவர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் 14.06.2004 முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தம வித்திட்ட காரணிகள் (முக்கியமானவை மட்டும் கீழே தரப்பட்டுள்ளன)

1. பல்கலைக்கழக பதிவாளர் ஏழாட்டை விடுமுறையுடன் இணைந்த வெளிநாட்டு விமானப் பயணச்செலவை குறிப்பிட்ட நாட்டிற்கு செல்லாமலே பெற்றுக்கொண்டமை. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்காததுடன் காலதாமதத்தின் மூலம் மோசடியை மூடிமறைக்க முனைகின்றமை.

2. பல்கலைக்கழக போதனைசாரா பணியாளர்களின் பணிகளை தனியார் மயமாக்குவதன் மூலம் பல்கலைக்கழக ஊழியர்களின் தொழிற்சங்க பலத்தை நசுக்க முனைவதுடன், அவ்வாறு தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளின் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்சை; சார்ந்தவர்களும் அவர்களின் பங்குக் கூட்டாளிகளும் இலாபமீட்டல்.

உ-ம் 1. வெளிவாரி கற்கை நெறிஅலகில் துப்பரவாக்கல் பணிகளுக்கு தனியார் நிறுவனமொன்றிற்கு மாதமொன்றிற்கு ரூபா 14,700 10 ஏயுவு (வரி) உள்ளக ஊழியர் ஒருவரை நியமித்தால் ஏற்படும் செலவு ரூபா 7,000 மட்டுமே.

உ-ம் 2. தனியார் வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளமை. வாடகை நாளொன்றுக்கு ரூபா 500 பிரயாணத்தின்போது கிலோ மீற்றருக்கு ரூபா 5, தரி;த்து நிற்பதற்கு மணித்தியாலம் ஒன்றுக்கு ரூபா 124 ஆகவே நாளொன்றுக்கு குறைந்த பட்சம் ரூபா 1,500 10 கடமை நேரம் தவிர்ந்த பிற நேரப் பாவனைக்கு புறம்பான கட்டணம்.

வாகன உரிமைiயாளராகப் பல்கலைக்கழக காதிதாதி வழங்குனர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிகின்றோம். நிதிக்கிளையின் பெரும்புள்ளிகள் சிலரும் இவ்வாகன உரிமையுடன் சம்பந்தப்படவதாகவும் சில தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஓட்டோ வாகனம் மாதக் கணக்காக உபயோகப்படாமல் உள்ளது. ஓட்டோ மற்றும் வாகனங்களுக்கென நாட் கூலி அடிப்படையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள ஊழியரும் சேவைக்கு அழைக்கப்படுவதில்லை. பல்கலைக்கழகத்தின் வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய தருணங்களிலும் அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இத்தனியார் வாகனம் பயன்படுத்தப்படுகின்றது.

உ-ம் 3. அரியாலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் குடியிருந்த அவரின் உறவினர் வீடு துணைவேந்தர் விடுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீட்டு உரிமையாளர் சிலர் விண்ணப்பித்திருந்த போதிலும் 5 கி;லோமீற்றருக்கும் கூடிய தொலைவிலுள்ள இவ்வீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்வீட்டின் விடுதிக் காப்பாளராக 67 வயது முதியவர் நியம விதிமுறைகளுக்கு முரணான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3. சகல பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ரூபா 1150/1000 சம்பளப்படி பிற பல்கலைக்கழகங்களில் நிலுவையுடன் வழங்கப்பட்டுள்ள போதும் எமது பல்கலைக்கழகத்தில் இதுவரை வழங்கப்படவில்லை.

4. சேவை மூப்பும் கல்வித்தகமையும் கொண்டோரைப் புறக்கணித்து குற்றவாளியாக தண்டனை வழங்கப்பட்ட சேவை மூப்புக்குறைந்த ஒருவரை பிரதம பாதுகாப்பு அதி;காரியாக எமது பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவு செய்தது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவரின் பிரத்தியேகக் கோவையில் பல பக்கங்கள் அகற்றப்பட்டிருப்பதாக எமக்கு நம்பகமாக தெரிய வந்துள்ளது. கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தி;ல் துணைவேந்தர் அலுவலகத் தளபாடத் திருட்டு வழக்கி;ல் குற்றவிசாரணைக்கு உள்ளானவர். வேறொரு திருட்டுக்கு உடந்தையாக இருந்தமைக்காக ஒருவார சம்பளம் தண்டமாக விதிக்கபட்டவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தி;லும் ஏராளமான திருகுதாளங்களில் ஈடுபட்டவர். பல்கலைக்கழக கடனொன்றைப் பல்கலைக்கழகத்;;தின் வௌ;வேறு பிரதேசங்களிலிருந்த அலுவலகங்களில் இக்கடனை இருமுறை (உண்மையான கடன்தொகையிலும் இருமடங்கு) பெற்றுள்ளார். இம்மோசடி கண்டு பிடிக்கப்பட்டது. இவருக்கும் எமது துணைவேந்தருக்கும் இருந்த நெருக்கத்தின் காரணமாக பிரதம பாதுகாப்பு அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்த நெருக்கத்தின் பயனாய் இவர்கள் இருவரும் பெற்ற பலன்களும் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. எனினும் அழுத்தங்களின் காரணமாக இதுவரை இதுகுறித்த ~நியமிக்கும் மனு| வை பேரவைக்கு சமர்ப்பிக்காது துணைவேந்தர் இழுத்தடித்து, ஒத்தி வைத்துள்ளார்.

5. பல்கலைக்கழக ஊழியர் சிலருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்படாமல்; தண்டனை வழங்கப்பட்டது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பு இவ்வாறு தண்டனைக்கு வழங்கப்பட்டமை தவறானது என்பதை வெளிப்படுத்தியது. எனினும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்ப்பை அமுலாக்க மறுக்கும் நிர்வாகம் இத்தீர்ப்பு தொடர்பாக அறிக்கை வெளியிடுமாறு பல்;கலைக்கழக பேரவையின் உறுப்பினர்கள் இருவரைப் பணித்துள்ளது. அவர்கள் இருவரும் 10 மாதங்களாக இந்த அறிக்கையை ஆராய்ந்து வருகிறார்கள்!!!

6. ஊழியர் இடர்கடன் மீளளிப்புத் தொகைக்கடன் வழங்கலுக்கு மீளப்பயன்படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு பயன்படுத்தப்படவில்லை. மேலும் இடர்கடனுக்கும், ரூபா 12,200 கடனுக்கும் ஆவணங்கள் ஆதாரம் காட்டுமாறு கோரப்பட்டுள்ளன. இந்நடைமுறை ஏனைய பல்கலைக்கழகங்களில் பின்பற்றப்படுவதில்லை. இங்கும் இவ்வாறு ஆதாரம் காட்டாத அதிகாரிகள் சிலருக்கு இடர் கடன் வழங்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிள் கடன் மீளளிப்பு தொகையும் பிற தேவைகளுக்கு பயன்படுகின்றது. போதனை சாரா ஊழியர் கணினிக்கடனைப்பெற சுற்றுநிருபத்தின் வாயிலாக தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் இக்கடன் வழங்கல் இப்பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்டது.

இது தவிர 30.01.2004 அன்று அங்கத்தவர்களுக்கு வெளியிட்ட பிரசுரத்தில் குறிப்பிட்ட கோரிக்கையில் தீர்க்கப்படாதவைகளும், 14.05.2004 பொதுச்சபை தீர்மானங்களும் எமது கோரிக்கையில் அடங்கும்.

(பாகம்02 பாகம்03)

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]