|
இந்தக் குழ ந்தைகளை அடையாளம் தெரிகிறதா? இவர்கள் எல்லோரையும்
நீங்கள் வீதிகளில் பார்த்திருக்க முடியும்.பிச்சை எடுத்துக் கொண்டு,குப்பைப் பொறுக்கிக் கொண்டு,சேற்றில்
விளையாடிக் கொண்டு,'அம்மாபசிக்குது'என்று பின்னாலே ஓடிக்
கொண்டு.இவர்கள் எல்லோருக்கும் ஒரே பிரச்னைதான்.வறுமை.இவர்களுக்கு ஒருநாளுக்கு ஒருவேளை சாப்பாடு கிடைப்பதே அரிது.இவர்களின் பெற்றோருக்கு நிரந்தர வேலை கிடையாது.எங்கேயாவது கூலி
வேலை அல்ல-ரோட்ட ோரங்களி ல் பிச்சை.சிலருக்கு பெற்றோர்களே கிடையாது.
இதைவிட 20ஆண்டுகால யுத்தம்
காரணமாக தங்கள் பெற்றோர்களை இழந்து நிர்க்கதியாகியிருக்கும்
ஊனமடைந்து இருக்கும் வடக்குக்கிழக்கில் உள்ள குழந்தைகள் எத்தனை
எத்தனை?அவர்களைப் பற்றி விசாரித்தால் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது
குழந்தைகள் சொல்வது,'அப்பா குடிக்கும் அம்மா அடிக்கும்'.பள்ளிக்குப் போகவில்லையா என்று கேட்டால் இவர்களுக்கு பதில்
சொல்லத்
தெரியாது.
காரிலும் ஸ்கூட்டரிலும் போகும் குழந்தைகளை ஏக்கமாய் பார்க்கத்
தெரியும்.கடைவீதிகளில் காசு கேட்டு நச்சரித்து சில்லறை வாங்கத்
தெரியும்.சினிமா போஸ்டரைப் பார்த்தே சினிமா பார்த்த சந்தோஷத்தை
அடையத்தெரியும்.இவர்களுக்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்னை.மழை.''பிளாட்பாரத்துல படுக்க முடியலை.கடை வாசல்ல படுத்தா
துரத்தறாங்க.''சரி.எதற்குஇத்தனைவிஷயங்கள்?நவம்பர்14குழந்தைகள்
தினம்.
உதவி செய்ய விரும்பும் உள்ளங்களுக்கு
உதவியாக
www.uthawi.com
www.changetheirlife.org
|