www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

நிஜங்களின் அம்பலம்

போலிச்சாமியர் பிரேமானந்தாவுக்கு யாழில் பிறந்ததின விழா

-Webtamilan-
பாலியல் துஷ்பிரயோகம் கொலை கற்பழிப்பு போன்றவற்றில் சம்பந்தப்பட்டவரென நீதிமன்றத்தால் தமிழ்நாட்டில் சிறைவக்கப்பட்டிருக்கும் போலிச்சாமியாரான பிரேமானந்தாவின் ஜெயந்தி (பிறந்த) தின நிகழ்வுகள் யாழ்பாணத்தில் உள்ள அவரது ஆச்சிரமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து அவரது படத்துடன் ‘ஜெய் பிரேம சாந்தி’ என்ற கோசத்துடன் கூடிய பெரியளவிலான விளம்பரம் யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் தினசரிப்பத்திரிகை தினக்குரலில் 16.11.2005 இல் வெளியாகியிருக்கின்றது. 17.11.2005 இவரது 55 வது ஜெயந்நி தினத்தில் விசேடபுசை பஜனை ஆராதனைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும் என வடபிராந்திய பிரேமானந்தா நிலையத்தின் ஒருங்கினைப்பாளர் திருமதி (?) பாக்கியலட்சுமி நடராசா என்பவரால் விளம்பரப்பட்டிருக்கின்றது விளம்பரத்தில் பூபாலகிருஷ்ண ஆச்சிரமம் சுன்னாகம் எனவும் முகவரியிடப்பட்டிருக்கின்றது.

விளம்பரத்தின் ஒருபகுதியில் ‘காலத்துக்கு காலம் சூரியகிரகணம் சந்திரகிரகணம் வரலாம் ஆனால் சூரியனையோ சந்திரனையோ முற்றாக மறைத்துவிட முடியாது. மானிட பிறப்பு என்பது இறைவன் எமக்களித்த மிகச்சிறந்த பரிசு‘ எனக்குறிப்பிடப்பட்டிருப்பது நகைப்பிடமாயிருக்கின்றது. இந்தக் கள்ளச்சாமி ஒரு இலங்கையர் என்பதும்ää இவர் இந்தியாவில் இயங்கி வரும் வேளை இவரது நடவடிக்கைகள் அம்பலமாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகி நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இவர் சிறையில் இருப்பது யாவரும் அறிந்ததே. திரைப்படங்களில் கூட போலிச்சாமியார் பாத்திரங்களில் இவரது பெயர் பயன்படுத்தப்படுகின்றது.

இவ்வாறான விளம்பரங்களை பணத்திற்காக பிரசுரிக்கும் குறித்த பத்திரிகை பற்றி மக்கள் விசனம் கொண்டுள்ளனர். பணத்திற்காக எந்த விதமான விளம்பரங்கனையும் இவர்கள் பிரசுரிப்பார்களா? இவ்வாறான போலி ஆச்சிரமங்கள் சாமியார்கள் மற்றும் அவர்களுக்;கு துணைபோகின்றவர்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும.; தழிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்பாணத்தில் கலாச்சாரத்தை பேண வேண்டிய ஊடகங்களே கலாச்சாரசீரழிவுடன் சம்பந்தபட்டவர்களுக்கு இடம் கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும்

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

இந்த இராசநாயகம் யார்.?

-Nitharsanam.com-
ஈ.பி.டி.பி யின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் என்று கூறிக்கொள்ளும் டக்ளஸ் தேவானந்தாவின் விசேட பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளருமாகச் செயற்பட்டு வந்தவர். கொல்லபட்ட முத்தலிப் மீடின் ஆகியோரின் மிகவும் நம்பிக்கைக்குரியவராகத் தொழிற்பட்டு வந்தவர். வடக்குக் கிழக்கு உட்பட இலங்கையின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து உளவுத் தகல்களைத் திரட்டி டக்ளஸ் தேவானந்தாவின் ஊடாக இந்தியாவிற்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கும் கொடுத்து வந்தவர். கொழும்பிலும் கொழும்பின் புறநகர்ப் பகுதியிலும் பொலிசாருக்குத் தகவல் கொடுக்கும் ஒரு உளவாளியாகச் செயற்பட்டு வந்தவர். அப்பாவித் தமிழ் இளைஞர்களை அனியாயமான முறையில் சிறையில் அடைக்கவும் அரச பொலிசாருக்குத் தவறான தகவல்களைக் கொடுத்துத் தமிழ் இளைஞர்களைச் சிறையிலிடவும் முக்கிய பங்காளியாக இருந்து வந்தவர். கொழும்பு கோட்டை பகையிரத நிலையத்திலும் வெள்ளவத்தையிலும் அதிகம் பொலிசாரிடம் கூட்டாகப் பொதுமக்கள் போன்று தமிழ் மக்களைக் கண்காணித்து வருபவர். சமிந்த என்னும் ஈபிடிபியின் சிங்கள உறுப்பினரின் உதவியுடன் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் முச்சக்கரவண்டித் தரிப்பிடங்கள் பலவற்றை உருவாக்கி அவர்களின் உதவியுடன் இரகசிமாகத் தமிழர்களின் தகவல்களைச் சேகரித்து வந்தவர். ஈ.பி.டி.பியின் கிழக்குப் பிராந்திய முக்கியஸ்தர் ஒருவரின் வெளியேற்றத்திற்கு இவரது ஆலோசனை முக்கிய பங்காற்றியதாலும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களையே இவர் அதிகம் சந்தேகித்து வந்ததனாலும்ஈ.பி.டி.பி கும்பலுக்குள் இவருக்குப் பல எதிர்ப்புக்கள் இருந்த வந்தது. அண்மையில் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளரின் வாகனத்திற்குள் வெடித்த குண்டு இவரின் ஆதரவுடன் ஈ.பி.டி.பினர் சிலரால் பொருத்தப்பட்டதாக அதே கும்பலின் ஒரு பகுதியினரால் ஈ.பி.டி.பிக்குள் கருத்துக்களைத் தெரிவித்து உட்குழப்பத்தை உருவாக்கியிந்தார்கள்.

இதன் பின்னர் இவர் மீதும் டக்ளஸ் தேவானந்தாவின் மெய்ப்பாதுகாவலர்களான பூனைப்படையினர் சந்தேகக் கண்கொண்டு பார்த்து வந்தனர். தன்மீது அரச புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் கொள்வதையறிந்து வைத்திருந்த இவர் பல இரகசியத் தகவல்களுடன் புலனாய்வுப் பிரிவின் பக்கம் முற்றுமுழுதாகச் செயற்பட்டு வந்ததாகவும் அண்மையில் இந்த அமைப்பிலிருந்து விலகிச் செல்வதாகக் கூறிக்கொண்டு சுவிஸ் அரசாங்கத்திடம் அகதி வீசாக்கேட்டு வெளிநாடு போவது போன்று ஜரோப்பிய நாடுகளில் புலனாய்வு வேலைகளுக்கு அரசாங்கத்தால் அனுப்பப்பட இருந்தவர்.

இவர் வெளிநாட்டிற்குச் சென்றால் டக்ளஸ் தேவானந்தாவின் இரகசியங்கள் வெளியாகிவிடும் என்பதற்காக டக்ளஸ் தேவானந்தாவின் கும்பலுக்குள் தனியாக இயங்கும் இரகசியக் குழுவினரால் சுட்டுக் கொல்லபட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதனால் இவருடைய மரணச் செய்தியை ஈ.பி.டி.பி.கும்பல் தமது ஊதுகுழல் இணையத்தளத்தால் வெளியே கொண்டுவர மறுத்திருந்தனர்.

வேண்டா வெறுப்பாகப் பொதுவான செய்திகளில் கூட்டான ஒரு செய்தியாகவே சேர்த்திருந்தனர். வளமையான நோர்வேத் தூதுவராலயத்திற்கு முன்னால் சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு சல்லாபம் பண்ணும் இவர்கள் இவருடைய மரணத்தை இருட்டடிப்புச் செய்ததன் ஊடாகத் தமக்குள் உள் முரண்பாடுகள் உண்டு என்பதனையும் தமக்குத் தாமே தமது துப்பாக்கிகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதனையும் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளனர்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]