www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

நிஜங்களின் அம்பலம்

யாழ்.நகரச்சுற்றாடலைப் பாதுகாப்பது யார்?

-Eezhanaadu.com-
யாழ்ப்பாணம் என்று சொல்லும் போது அதற்கெனத் தனி மரியாதை உண்டு. யாழ்ப்பாணக் கலாசாரமே உலகிலுள்ள பெரும்பாலான தமிழ்ப் பிரதேசங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால் அன்றைய யாழ்.சமுகத்துக்கும், இன்றிருக்கும் யாழ்.சமுகத்துக்கும்,இடையே நிறைய மாற்றங்களை அவதானிக்கக்கூடிய தாக உள்ளது. ஆயினும், தற்போதைய மாற்றங்கள் எமது சமுகத்தைப் பின்னடை யச் செய்வனவாகவே அமைகிறது.

இதற்குப் பல காரணங்களைக் கூறமுடியும். அதாவது- யுத்த நிறுத் தத்தைப் பயன்படுத்தி கொழும்பு வாழ் தமிழ் மக்களின் வருகையு டன் கொழும்பு நகரக் கலாசார, நடையுடை, பாவனைகளும் சேர்ந்து வருகின்றமை மக்களின் ஆடம்பர வாழ்க்கை போன்வற்றை முக்கிய மாக குறிப்பிடலாம். இந்த மாற்றங் களால் யாழ். மக்களுக்கென்று போற் றப்பட்டு, பேணிப்பாதுகாக்கப் பட்டுவந்த நாகரிகம் சிதறடிக்கப்படு கிறது. கொழும்பிலிருந்து இங்கு வருகைதருவோர் கொழும்பு நக ரைப்போன்றே யாழ்ப்பாணத்தை யும் நினைத்து நடையுடை, பாவ னைகளில் நடந்து கொள்கிறார்கள். இதில் கவலைக்குரிய விடயம் என்ன வென்றால், தாங்களும் யாழ்.சமுகத் தவர்தான். எம்முடைய கலாசார மும் இதுதான். நாம் இதைத்தான் பின்பற்ற வேண்டும் என்பதை எள் ளளவேனும் நினைக்க மறந்து விடு கிறார்கள் என்பதேயாகும். இதைப் பார்க்கும் யாழ். மக்களும், தாங் களும் இவ்வாறு உடையணிந்து - தாம்தான் நவநாகரிகமானவர்கள் என்ற எண்ணத்தைத்தம் மனதில் நினைத்து, மறைமுகமாக சமுகச் சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாகும்.

நவீன உலகுக்கு அமைவாக யாழ். நகரமும் மாற்றமடைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது தொழிற்சாலைகளின் அதிக ரிப்பு, வாகனப் போக்குவரத்து நெரி சல் போன்ற பல மாற்றங்களைக் குறிப்பிடமுடியும். இவ்வாறான மாற் றங்களால் சாதகவிளைவுகள் காணப் பட்டாலும், பாதகமான விளைவுக ளும் இருக்கத்தான் செய்கிறன.

பாதக விளைவுகள் எனப்படும் போது தொழிற்சாலைக் கழிவுகள், போக்குவரத்து நெரிசல் போன்ற வற்றாலும் கண்ட கண்ட இடங் களில் கழிவுகளைக் கொட்டுவதா லும் சுற்றாடல் மாசடையக் கூடிய பாதகநிலை தோன்றியுள்ளது. இவற் றைத் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும். அன்றேல் எமது யாழ்.சமுகம் பாரிய பின்விளைவு களைச் சந்திக்கவேண்டிய துன்பி யல் நிலை தோன்றும்.

யாழ்.நகரச் சுற்றாடலானது நாளுக் குநாள் மாசடைந்து கொண்டு செல் கிறது. காணும் இடங்களிலெல் லாம் குப்பைகள், கழிவுகள் காணப் படுகின்றன. இந்தக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு, நோய் கள் தோன்றும் வாய்ப்புக்கள் அதி கமாகின்றது.

தற்போது யாழ்.நகரத்தின் தொழிற் சாலைக் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படுவதில்லை. உதாரணமாக - யாழ். மணிக்கூட்டு வீதிப்பகுதியில் அமைந்துள்ள ஒட்டுத் தொழிற்சாலை களின் இரும்புக் கழிவுகள் அந்தந்த தொழிற்சாலைகளின் முன்னா லேயே குவிந்துகிடப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. இதன் காரண மாக அந்த வீதியால் பயணம் செய் யும் பாதசாரிகளும், வாகனங்களும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டி யுள்ளது. இதைச் சீர்செய்ய வேண்டு மாயின் அந்த வீதியில் உள்ள கழிவு கள் உடனடியாக அகற்றப்பட வேண் டும்.

இவ்வாறே யாழ்.ஆஸ்பத்திரி வீதிப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் - தங்கள் வர்த்தக நிலையங்களி லிருந்து அன்றாடம் வெளியேற்றும் கழிவுகளை வீதியில் வீசுவதும், கழிவு நீர் வழிந்தோடும் வாய்க்கால்களுக் குள் போடுவதுமான பொறுப்பற்ற செயலைச் செய்கிறார்கள். இத னால் கழிவு நீர் வழிந்தோடும் வாய்க் கால் குப்பைகளால் நிரம்பி வழி கிறது. இதன் காரணமாக கழிவு நீர், குப்பைகள் இரண்டும் வாய்க்கால் களுக்குள்ளேயே தேங்கிநின்று, துர் நாற்றம் வீசுகிறது. இதனை அந்தப் பகுதி வர்த்தகர்களும்சரி, மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினரும் சரி கவனத்திலெடுப்பதாகத் தெரிய வில்லை. இதனால் சுகாதாரச் சீர் கேடு, நோய்கள் என்பன ஏற்பட இட முண்டு. இதுதவிர அவ்வீதியிலேயே காணப்படும் பழக்கடைகளின் உரி மையாளர்களும் அழுகிய பழங் களை இவ்வாறுதான் வீசியயறிகின் றார்கள். இதனாலும் துர்நாற்றம், கிருமிகள் என்பன அதிகரிக்கக் காரண மாக அமைந்துவிடுகிறது.

இதுதவிர யாழ்.நகரில் என்று மில்லாதவாறு தற்போது பொலித் தீன் பாவனை அதிகரித்துள்ளது. மக்கள் பொருட்களைக் காவிச் செல் வதற்கு இலகுவான பொருளாக மசொப்பிங் பாக்டுகைக் கருதி எந்தச் சிறிய பொருளை எடுத்துச் செல்வ தானாலும் சொப்பிங் பாக்கைப் பாவிப்பது மட்டு மல்லாமல், இவற் றைக் கண்ட கண்ட இடங்களில் வீசியயறிந்து விடுகிறார்கள். இது உக்கும்திறன் அற்றது. அது காலா காலமாக நிலத்துக்குள் புதையுண்டு நிலத்தை மாசடையச் செய்கிறது. இதனை நீக்க, பொலித்தீன் பாவ னையைத் தடைசெய்ய வேண்டும். இது உடனடியாக இயலாத காரியமாக இருந்தாலும், பொலித்தீனை மீள் பாவனைக்கு உட்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட காலத்துக்குள் பொலித்தீன் பாவனையை முற்றாகத் தடைசெய்ய முடியும். மேற்கத் தேய நாடுகள் பலவற்றில் பொலித் தீன் தடை அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வாகனப் போக்குவரத்து என்று மில்லாதவாறு தற்போது யாழ்.நக ரில் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனாலும் சுற்றாடல் பாதிக்கப் படும் அபாயம் அதிகரித்து வருகி றது. அதாவது வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, வாகன இரைச் சல், ஹோன் சத்தம் என்பன மக்க ளின் இருதயம் சம்பந்தமான நோய் களுக்குக் காரணமாக அமைகிறது. அதிக இரைச்சல் உள்ள வாகனங் களைத் தடைசெய்தல், அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைத் தடைசெய்தல், அதிக ஒலியயழுப் பும் ஹோன்களைத் தடைசெய்தல் என்பவற்றால் இவற்றுக்கு ஓரள வேனும் தீர்வு காணமுடியும்.

இவ்வாறான நிலை தொடர்ந் தால் பாதிக்கப்படப்போவது எமது மக்கள்தான் என்பதை நாம் அனை வரும் கருத்தில்கொண்டு, அவற்றைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

யாழ்.மாநகரசபையின் கழி வகற்றும் பிரிவினர் யாழ். நகரில் திருப்திகரமாகச் செயற்படவில்லை என்று மக்களால் குறை கூறப்படு வது யாவரும் அறிந்த விடயமாகும். அவர்களும் ஏனோ தானோ என்று செயற்படுவது மிகுந்த வேனைக் குரிய செயற்பாடாகும். தங்களால் உரிய முறையில் கழிவகற்றல் செயற் பாடு மேற்கொள்ளப்படாமைக்கு வசதிக்குறைவையே, அதாவது இயந்திர வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான நிதிப்பற்றாக் குறை, தொழிலாளர் பற்றாக்குறை என்பவற்றையே காரணங்களாகக் குறிப்பிடுகின்றனர். இதுதவிர ஒரு வீட்டின் முன்னாலுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு வீட்டின் உரிமை யாளர் சுத்திகரிப்பு தொழிலாளர் களின் தயவுக்கு காத்திருக்கவேண் டும். அன்றேல் பாரிய சிரமத்தின் மத்தியிலேயே இவ்வாறான கழிவு கள் அகற்றப்படும். அதாவது அவர் களை அனுசரித்துப் போனால் மட் டுமே குப்பைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். இல்லா விட்டால் நான்கைந்து நாட்களின் பின்னரே இவை அகற்றப்படும். இவற்றால் பாதிக்கப்படப்போவது வறுமைப்பட்ட மக்கள்தான் என் பதை உரிய அதிகாரிகள் கவனத் தில் கொள்ளவேண்டும்.

இன்று பல அரசசார்பற்ற நிறு வனங்கள், அரச திணைக்களங்கள் பாரிய அபிவிருத்தி நடவடிக்கை களை யாழ்.நகரில் மேற்கொள்கின் றன. புதிது புதிதாகப் பல கட்டிடங் கள் அமைக்கப்படுகின்றன. புதிய ஆலயங்கள் அமைக்கப்படுகின் றன. இன்னும் பல்வேறுபட்ட அபி விருத்தி நடவடிக்கைகளுக்காக அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் திட்டங்களை வகுத்துக் கொண்டு தான் இருக்கிறன. இவ்வாறு பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டாலும், சுற்றாடல் பாதுகாப்புப்பற்றி எவருமே கண்டு கொள்ளாதது ஏன்? நகரில் ஏற்கனவே தமது அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அரசசார்பற்ற நிறு வனங்களுடன் யாழ்.மாநகரசபைப் பகுதியினர் தொடர்புகொண்டு திட் டங்கள் எதுவுமே தீட்டப்படாதது ஏன்? முதலில் கவனிக்கப்பட வேண் டிய யாழ்.நகரின் துப்புரவு, சுற்றா டல் பாதுகாப்பு என்பவற்றை விடுத்து வேறுவகையான அபிவிருத்தி நட வடிக்கைகளில் பெரிதும் கவனம் செலுத்தப்படுவது ஏன்? இவை அனைத்தும் யாழ்.நகர்ப்புறமக் களுக்குப் புரியாத புதிராகக் காணப் படுகிறது. அந்த விடயத்தில் புத்தி ஜீவிகளுடைய பதிலும் மெளன மாகவே இருக்கிறது.

எது எவ்வாறு இருப்பினும் இது எமது நகரம். நாம்தான் இதைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருடைய மனங் களிலும் ஆழப்பதிய வேண்டும். இவ் வாறு மனவுறுதியுடன் செயற்பட் டால் சுற்றாடல் பாதுகாப்பு என் பது ஒரு பெரியவிடயமல்ல. ஆகவே அரச, அரசசார்பற்ற நிறுவன அதி காரிகள், தனியார், பொதுச் சமு கத்தவர் என ஒட்டு மொத்தத்தில் அனைவருமே சுற்றாடலைப் பாது காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]