www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

நிஜங்களின் அம்பலம்

போலிச்சாமியர் பிரேமானந்தாவுக்கு யாழில் பிறந்ததின விழா

-Webtamilan-
பாலியல் துஷ்பிரயோகம் கொலை கற்பழிப்பு போன்றவற்றில் சம்பந்தப்பட்டவரென நீதிமன்றத்தால் தமிழ்நாட்டில் சிறைவக்கப்பட்டிருக்கும் போலிச்சாமியாரான பிரேமானந்தாவின் ஜெயந்தி (பிறந்த) தின நிகழ்வுகள் யாழ்பாணத்தில் உள்ள அவரது ஆச்சிரமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து அவரது படத்துடன் ‘ஜெய் பிரேம சாந்தி’ என்ற கோசத்துடன் கூடிய பெரியளவிலான விளம்பரம் யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் தினசரிப்பத்திரிகை தினக்குரலில் 16.11.2005 இல் வெளியாகியிருக்கின்றது. 17.11.2005 இவரது 55 வது ஜெயந்நி தினத்தில் விசேடபுசை பஜனை ஆராதனைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும் என வடபிராந்திய பிரேமானந்தா நிலையத்தின் ஒருங்கினைப்பாளர் திருமதி (?) பாக்கியலட்சுமி நடராசா என்பவரால் விளம்பரப்பட்டிருக்கின்றது விளம்பரத்தில் பூபாலகிருஷ்ண ஆச்சிரமம் சுன்னாகம் எனவும் முகவரியிடப்பட்டிருக்கின்றது.

விளம்பரத்தின் ஒருபகுதியில் ‘காலத்துக்கு காலம் சூரியகிரகணம் சந்திரகிரகணம் வரலாம் ஆனால் சூரியனையோ சந்திரனையோ முற்றாக மறைத்துவிட முடியாது. மானிட பிறப்பு என்பது இறைவன் எமக்களித்த மிகச்சிறந்த பரிசு‘ எனக்குறிப்பிடப்பட்டிருப்பது நகைப்பிடமாயிருக்கின்றது. இந்தக் கள்ளச்சாமி ஒரு இலங்கையர் என்பதும்ää இவர் இந்தியாவில் இயங்கி வரும் வேளை இவரது நடவடிக்கைகள் அம்பலமாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகி நீதிமன்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இவர் சிறையில் இருப்பது யாவரும் அறிந்ததே. திரைப்படங்களில் கூட போலிச்சாமியார் பாத்திரங்களில் இவரது பெயர் பயன்படுத்தப்படுகின்றது.

இவ்வாறான விளம்பரங்களை பணத்திற்காக பிரசுரிக்கும் குறித்த பத்திரிகை பற்றி மக்கள் விசனம் கொண்டுள்ளனர். பணத்திற்காக எந்த விதமான விளம்பரங்கனையும் இவர்கள் பிரசுரிப்பார்களா? இவ்வாறான போலி ஆச்சிரமங்கள் சாமியார்கள் மற்றும் அவர்களுக்;கு துணைபோகின்றவர்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும.; தழிழர்களின் கலாச்சார தலைநகரான யாழ்பாணத்தில் கலாச்சாரத்தை பேண வேண்டிய ஊடகங்களே கலாச்சாரசீரழிவுடன் சம்பந்தபட்டவர்களுக்கு இடம் கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும்

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]