www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

நிஜங்களின் அம்பலம்

கருணாவிற்கு முன்னாள் போராளியின் கடிதம்

-மூலம்:சூரியன்.கொம்-
உங்களின் கீழிருந்து வளர்ந்து வருவதாகக் கனவுகண்டு படுகுழிக்குள் வீழ்ந்திருக்கும் முன்னாள் போராளி எழுதுவது,

நான் இப்போது தாயகத்தில் இல்லை. ஆனால் உங்களை நம்பி போராட்ட வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட பலர் இன்று தாயகத்தில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அல்லாடிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். அவர்களை விட என் வாழ்க்கை கடினமானதல்ல. உங்கள் வழிகாட்டலை நம்பி தேசியத் தலைமையைப் பற்றிய உங்கள் விமரிசனங்களை நம்பி நாங்கள் ஏமாந்து விட்டதால் எங்களால் மீண்டும் எங்கள் போராளிச் சகோதரர்களின் முகத்தில் விழிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மட்டு. அம்பாறை மாவட்டத்தில் இருக்க முடியாமல் வெளிநாடொன்றில் வாழ்கிறேன். தாய் நாட்டிற்கும் என்னோடிருந்து போராடி, என் பயிற்சியிலும் வழிகாட்டலிலும் களமிறங்கி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கிறேன். துரோகியின் வழிகாட்டலில் தவறு செய்தவனின் பிள்ளை என்று என் அடுத்த தலைமுறை அவமானப்படக் கூடாது என்பதற்காகவும், தக்க தருணத்தில் என் பிள்ளைகளாவது தாய்நாட்டிற்கான முழுச்சேவையைச் செய்யும் பேறு பெற்றிட வேண்டும் என்பதற்காகவுமே இந்த அஞ்ஞாத வாசம்.

அது நிற்க, இப்போது விடயத்திற்கு வருவோம். நீங்கள் கட்சியொன்றை ஆரம்பித்திருப்பதாகத் தகவல். அரசியல்வாதிகளைப் பற்றிய உங்கள் மட்டரகமான விமரிசனங்கள் நமது படையணியில் மிகவும் பிரசித்தம். அதுவும் குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றிய உங்களின் பிரசித்தமான 'அந்த" விமர்சனத்தை நானும் பலரிடம் சொல்லியிருக்கிறேன். இப்போது நீங்கள் அதே டக்ளசோடு அரசியல் பாணி வேட்டி சட்டை அணிந்து மாலை போட்டு வரும்போது நான் முன்னே வந்து அந்த வசனத்தை ஞாபகப்படுத்தினால் உங்கள் முகம் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். வேதனையை மீறி கொஞ்ச நேரம் வயிறுகுலுங்கச் சிரிக்க முடிந்தது.

அரசியல் என்பது உங்களைப் பொறுத்தளவில் ஒரு வியாபாரம். அங்கே வசனங்களை விற்று வாழ்க்கையை நடத்தலாம் என்பது உங்களின் நப்பாசை. அதுவும் நீங்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் பரந்தன் ராஜனும் சும்மா லேசுப்பட்ட ஆள் இல்லை. மாடு கடத்தி விற்றவர், ஆனந்தசங்கரியோடு சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரை எழுபதுகளின் நடுப்பகுதியில் சுட்டுக்கொன்றவர். சகோதரியின் கணவரையே காசுத் தகராறில் சீவி எறிந்தவர் என்று அவருக்கும் ஏகப்பட்ட விருதுகள். அவரின் தம்பியே உங்கள் கட்சியின் 'செயலாளர் நாயகமாக" இருப்பது உங்களுக்கு மிகப்பெரும் பேறு. சபாஷ்! பலே! சரியான கூட்டணி என்று கூவவேண்டும் போல் இருக்கிறது.

தவிர பரந்தன் ராஜனுக்கு ஊட்டியிலே ஏகப்பட்ட அசையாச் சொத்துக்கள் இருப்பதாகப் பேசிக்ககொள்கிறார்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு அந்தப்பக்கம் 'உல்லாசப்பயணம்" போகும் நோக்கமும் இருக்கலாம். எதற்கும் பார்த்து நடவுங்கள் அம்மான்.

இப்போது உங்களைப் பீடித்திருக்கும் நோய்க்கு என்ன மருந்து தேவை என்பது யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் நோயாளி என்பதில் எனக்குக் கிஞ்சித்தேனும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அந்த நாட்களில் நாங்கள் பார்த்த கருணா வேறு. இப்போது அறிக்கைகள் மூலமும் கட்சியமைத்துக் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஆட்களின் மூலமும் வெளிப்படும் கருணா வேறு. முன்பொரு நாள் முல்;லைத்தீவுக் கடற்பரப்பில் ஏழு கடற்கலங்களின் அணிவகுப்பில் நீங்கள் பயணிக்கிறீர்கள். உங்கள் பயணத்திற்குக் காவலாக இரண்டு கரும்புலிப் படகுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கரும்புலி வீரர்கள் மட்டும் அன்று தங்களின் உயிர்களைத் தாரை வார்த்திருக்கா விட்டால் இன்று இந்த மண்ணில் ஒரு துரோகியின் எண்ணிக்கை குறைந்திருக்கும். அன்று தப்பிவந்த நீங்கள் கரையை அடைந்ததும் சொன்ன வாக்கியத்தை என்னால் மறக்க முடியவில்லை. 'இன்று இந்தப் பயணத்தில் வந்த எவரும் உயிருள்ளவரை தமிழீழ இலட்சியத்திற்காக போராட வேண்டும்" என்பதே அந்த வசனம். அதைக் கேட்டிருந்த பலர் இன்று மாவீரராகி விட்டார்கள். ஆனால் அதைச் சொன்ன நீங்கள் இன்று உயிரோடிருந்து தமிழீழத்திற்கு மாபெரும் துரோகம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

அன்று அந்தத் தியாகத்தைச் செய்தவர்களி;ல் ஒருவர் வாழைச்சேனையைச் சேர்ந்த கண்ணாளன். மற்றவர் நகுலன். வடபகுதியைச் சேர்ந்தவர். பிற்பட்ட நாட்களில் வட தமிழீழம் பற்றி வாய் கிழியப் பிரதேசவாதம் பேசித்திரிந்த போது அந்தத் தியாக நிமிடத்தை ஒரு பொழுதாவது சிந்தித்திருந்தீர்களா? அல்லது உங்களுக்குப் பிடித்த நோயின் காரணமாக அப்போதே அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா?

மட்டக்களப்பிலிருந்து விரட்டியடிக்கப்படும் முன்னான நாற்பத்தியொரு நாட்களில் நீங்கள் கக்கிய பிரதேசவாத விஷத்தையும் வடபகுதித் தமிழர்களைக் விரட்டுவோம் என்ற நிலைப்பாட்டையும் இப்போது திடீரென்று கைவிட்டு விட்டீர்கள். பெரிய நாயைக் கண்டதும் வாலைச் சுருட்டிக்கொண்டு மூலைக்குப் போகும் சிறிய நாயின் நிலைப்பாட்டை அங்கே காண்கிறேன்.

உங்கள் கட்டளையில் பல நு}று போராளிகள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களின் முகங்களில் கரிபூசியதைப் போல் போராளிகளைக் கொன்ற சிங்களப் படைகளின் கொல்லைப்புறத்தில் குறுகிக் கிடக்கிறீர்கள். உங்களின் உணர்வுகள் கூடக் காயடிக்கப்பட்டே இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. இல்லாவிட்டால் மட்டக்களப்பில் எண்ணிலடங்காத மௌனப் புதைகுழிகளை விதைத்த சிங்களக் கரங்களிடம் சோற்றுப்பிச்சை கேட்பீர்களா?

இன்று வெளியிலே தலை காட்ட முடியாத தலைவருடனும் இந்தியாவில் தஞ்சம் புகுந்து கிடக்கும் செயலருடனும் தோன்றிய ஒரு கட்சிதான் தமிழருக்கு விடிவு தேடித்தரும் என்று உலகத்தை நம்பச் சொல்கிறீர்கள். புதிதாகப் பிறக்கும் துரோகிகள் முந்திய துரோகிகளை விட பெரிதாக ஏதாவது செய்து தங்கள் எஜமானர்களின் அபிமானத்தைப் பெற விரும்புவார்கள். அந்த இயல்பான உளவியல் உங்களிடமும் வெளிப்படுவது ஆச்சரியமில்லை. நீங்களும் என்னதான் செய்வீர்கள்! போட்டிருப்பது நாய் வேஷம் அல்லவா? குரைக்காது இருந்தால் விடுவார்களா? உங்கள் பார்வையைச் சூழ்ந்திருக்கும் மாயையை விலக்கிவிட்டுப் பாருங்கள் அம்மான், உங்களின் நிருவாணம் புரியும். பல உளவியல் உண்மைகள் விளங்கும். அடங்காத மனைவியை அடக்கமுடியாத ஆற்றாமையை நீங்கள் சுய பச்சாத்தாபமாகப் பார்த்து ஏமாந்தது விளங்கும். அதனால் நீங்கள் பட்டமிழந்து பதவியிழந்து உலகின் முன் ஈனப்பயலாகி இழிந்து நிற்பது தெளிவாகும்.

தமிழீழத்தின் பெரிய தளபதியொருவர் தங்கள்வசம் இருப்பதாக சிங்களப்படை எண்ணக்கூடும். ஆனால், பின்புறம் எதிரி இருக்கும் நிலையில் அந்தத் தளபதி ஒருபோதும் களத்தில் கால் வைத்ததில்லை என்பது எனக்கல்லவா தெரியும்? முன்னுக்கும் பின்னுக்கும் எதிரி இருக்கத்தக்கதாக நீங்கள் ஒரு சண்டையாவது பிடித்திருக்கிறீர்களா என்பதை அப்போது ஒருவரும் யோசித்துப் பார்த்ததில்லை. நான் யோசித்தேன். மற்றத் தளபதிகளுக்கும் உங்களுக்கும் அதுதான் பெரிய வித்தியாசம். சண்டையில் காயப்படாத எந்தத் தளபதியையாவது இந்த இயக்கத்தில் காட்டமுடியுமா? ஆனால் அதற்கு விதிவிலக்காக இருந்த அந்த ஒரேயொரு அற்புத மனிதர் தாங்கள்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். கேவலம் கம்பி றோல் கீறிய தழும்பாவது... என்ன சங்கடமான இடமொன்றில் கைவைத்து விட்டேனா? அப்போது சொல்லத் துணியவில்;லை. இப்போது சொல்கிறேன். தமிழீழத் தளபதிகளில் மிகப்பெரி;தாகப் பேசப்பட்டவரும் மிகப்பயந்தவரும் நீங்கள்தான். உங்களோடு நின்ற எவராவது இதை வாசித்தால் இந்த உண்மை அவர்கள் மனதில் சட்டென்று உறைக்கும்.

துரோகம் என்பது தமிழனுக்கும் புதிதல்ல. ஆனால் அதையே வாழ்க்கை முறையாகக் கொண்டு துரோகத்தை நியாயப்படுத்தும் அரசியலில் ஈடுபடும் தமிழர்கள் இலங்கையில் மட்டுமே உண்டு. அதில் பட்டறிவு பெற்ற பலர் உங்களுக்கு பால பாடம் சொல்லித் தந்திருப்பார்கள். நீங்களும் கெட்டிக்காரன் தானே. சுலபமாகக் கற்றுவிட்டீர்கள். ஒரு கையில் ஒலிவாங்கியையும் மறுகையில் கொலை வாளுமாகக் களத்தில் இறங்கி விட்டீர்கள். நீங்கள் எதைப் பேசினாலும், எதைச் சேர்த்து வைத்தாலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைத்திருப்பது துரோகியின் பிள்ளை என்ற சொத்தை மட்டும்தான். தமிழர் வாழும் எந்த இடத்திலும் நாளைய உணவிற்கு நாதியற்ற பிள்ளைக்கு இருக்கும் கௌரவம் கூட உங்கள் பிள்ளைக்கு மட்டுமல்ல, சந்ததிக்கே இருக்கப் போவதில்லை. தங்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக உங்கள் பிள்ளைகள் உங்கள் பெயரை முன்னெழுத்தாகப் போடாது விடும் காலம் து}ரத்தில் இல்லை. அந்தப் பிள்ளைகளைத் து}க்கித் திரிந்தவன் என்ற வகையில் அவர்களுக்கு என் அனுதாபங்கள்.

உங்களால் உங்கள் குடும்பம் பெற்றதுதான் என்ன? உங்கள் அண்ணனையும் சுயமுடிவு எடுக்கவிடாது துரோகியாக்கி விட்டீர்கள். உங்களின் அண்மைக்கால அறிக்கையிலும் நடத்தையிலும் கூட முதிர்ச்சியைக் காணமுடியவில்லை. நீங்கள் அமைக்கும் வியூகங்கள் உங்களையே இடறிவிடக் கூடியதாகவே இருக்கின்றன. உங்களோடு சேர்ந்துள்ளவர்கள் அன்றாட வியாபாரிகளின் தன்மையுடையவர்கள். நீங்களோ நீண்ட காலத்திற்கு இருக்கலாம் என்ற விதத்தில் அறிக்கை விடுகிறீர்கள். அந்த அறிக்கைகளில் அவலத்தின் ஓலமும் மரண பயத்தின்; நடுக்கமும் இருப்பது உங்களோடு நெருங்கிப் பழகிய எனக்குக் கேட்காமல் போகவில்லை. மொத்தத்தில் பயன்படுத்தப்படுகிறீர்கள், பரிதாபகரமான முறையில். தற்போது நீங்கள் நடத்திவரும் கொலைகளில் நீங்கள் எதிர்பார்க்கும் இலாபம் உங்களுக்குக் கிடைக்கும் என்றும் நான் நம்பவில்லை. உங்களின் ஆட்களை நீங்கள் அதற்குப் பயன்படுத்தினாலும் நீங்கள் சேர்ந்துள்ள அணியில் இருக்கும் வேறு சிலருக்கே அதனால் அதிக நன்மைகள். உதாரணமாக நமது பற்பொடிக் கொம்பனிக் கொலை வீடுகள் து}சு தட்டப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அங்கிருந்து வெளியே வரும் எவரையும் எதனையும் மட்டக்களப்பு வாசிகள் எப்படிப் பார்ப்பார்கள் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அதற்குள் கால் வைக்கிறீர்கள் என்றால் நீங்கள் எங்கோ போய்விட்டீர்கள் என்று பொருள்.

சரியம்மான். உங்கள் அடுத்த நகர்வுகளைப் பார்த்து அடுத்த மடலை எழுதுகிறேன். அதுவரை நீங்கள் நலமாயிருந்தால்தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்.

-அருகிலிருந்தவன் (The man who was nearby)

அனுப்பியவர் வெப்தமிழன்

1 கருத்துக்கள்

As usual your editorial lacks balance, objectiveness and profound disregard for facts. It is completely biased, ill-informed and borders on stupidity. Indeed your propensity for self-delusion, hallucination and paranoia are remarkable!

You must be the dumbest among the dumb to assert that the LTTE poses a threat to India?s security. It is an illogical argument and based on unfounded fear. How could 3 million people of a tiny state pose a threat to mighty India with a population of one billion?

You may be rest assured that unlike the Sinhalese the Thamils for historical reasons are the natural allies of India due to common culture, language, religion and ethnicity.

In fact not long ago the Sinhalese politicians were accusing Thamils of owing extra territorial allegiance to India rather than Sri Lanka. It is because of this perception that Thamils, including those of Indian origin, have suffered physical violence and discriminatory laws at the hands of the majority Sinhalese since independence.

You claim, albeit naively, that ?At the same time the draft defence cooperation agreement, which is likely to be signed by the end of the year, is not meant to encourage the Sri Lankan Government to go for a military solution to the Tamil question.? On the contrary, the defence agreement is bound to weaken the LTTE by altering the current military parity between the LTTE and Sri Lankan army. Furthermore, it will hearten Sri Lankan ruling circles to get bolder in their attempt to provoke a war in the belief that India is behind them by virtue of the defence agreement.

Mr. Ranil Wickremesinghe, who initiated this defence agreement, has claimed more than once that it is part of an international security safety net against military threat faced by Sri Lanka. Mr. Ranil Wickremesinghe clearly meant the LTTE as the organization posing a military threat since Sri Lanka faces no threat from its neighbours. Therefore, the defence agreement will and shall enhance the ?steroid injection to Sri Lanka's existing military capabilities.?

You have also conveniently overlooked the fact that the previous government of Ranil Wickremesinghe did accept the LTTE proposal in October, 2003 for an "Interim Self-Governing Authority" as the basis for further talks. It was President Chandrika who rejected the ISGA out of hand and took over the defence portfolio after claiming that the ?reasons for taking this action was in the national interest and it was taken after careful consideration, in order to prevent further deterioration of the security situation? a claim dismissed by Prime Minister Ranil Wickremesinghe as "an attempt to subvert the mandate for peace." (The Hindu November 04,2003)

You are, therefore, sticking your tongue in your cheek when you wrongly accuse the LTTE by saying ?is nothing but a transparent delaying tactic even as the extremist organisation consolidates its de facto hold on North-East Sri Lanka by physically eliminating all Tamils who dare to oppose it.?

Contrary to your assertion there are no Thamils opposed to the ISGA and no one is eliminated because of that fact.

Again, if as you claim that the LTTE is resorting to delaying tactics because it wants to consolidate its de facto hold on North-East of Sri Lanka should that not be a good reason for President Chandrika to commence talks without further foot-dragging and prevarication? Since more delay will mean LTTE's de jure rule?

Ironically you did not thought it fit to knock some sense into the heads of extremist Sinhalese forces like the Hela Urumaya and JVP that are opposed to any peaceful settlement of the ethnic conflict based on internal self-determination, democratic pluralism and justice. The Hela Urumaya consisting of yellow robed Buddhist monks wedded to majoritarian political hegemony is openly espousing the racist theory that the whole island belongs to Buddhist Sinhalese only and Thamils who are invaders must live at their mercy and goodwill!

It is nothing new and no surprise The Hindu, being part of the anti- Thamil establishment that is out to denigrate and destroy Thamil nationalism, has emerged as the darling of Sinhalese chauvinistic elements!

Yours truly,

Veluppillai Thangavelu
President / Tamil Creative Writers Association

Contact: Tel. (416) 281 1165 (416) 447 6314 (905) 949 0824
Fax (416) 261 6745

E-mail: athangav@sympatico.ca


அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

கட்சி அமைக்க கொடுத்த காசு அபேஸ்.

-நன்றி:நிதர்சனம்.கொம்ஸ :இரமேஸ் -
இலங்கையில் மீண்டும் ஈ என் டீ எல் எவ் கட்சியினை நிறுவும் திட்டம் அம்பலமாகியுள்ளது. இந்த விடயம் பற்றி தெரிய வருவதாவது இந்திய இராணுவத்தின் அடிவருடிகளாகச் செயற்பட்ட தேசவிரோதக் கும்பலை மீண்டும் இலங்கையில் செயற்பட வைப்பதற்கு சந்திரிக்கா அம்மையார் எடுத்த முயற்சி பணத்திருட்டு மோசடியால் ஆரம்ப கட்டத்திலேயே புஸ்வாணமாகியுள்ளது. கடந்த மேமாதம் இவ் அமைப்பின் தலைவர் பரந்தன் றாஜன் ஊடாக கட்சியை நிறுவுமாறு சந்திரிக்கா அம்மையார் தனது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிகாமர் ஊடாக கேட்டுக்கொண்டதாகவும் அதன் ஆரம்ப செலவாக இரண்டு கோடி ரூபாய்களை இலங்கைவங்கிக் கிளையூடாகத் தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட பரந்தன் றாயன் சுமார் ஜம்பது இலட்சம் இந்திய ருபாய்களை இலன்டனில் உள்ள வெம்பிலி பிராந்திய ர்ளுடீஊ வங்கிக் கிளைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தப்பணத்தை கட்சியின் ஜரோப்பியப் பொறுப்பாளரான தேசவிரோத ஊடகத்தை நடாத்திவரும் றாமராஜ் பெற்றுக்கொண்டு அந்த பணத்தில் இலங்கை சென்று இலங்கையில் கில்ரன் நட்சத்திரவிடுதியில் தங்கியிருந்துவிட்டு மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளார். கட்சியை நிறுவஅனுப்பிய பணத்தை தனது தனிப்பட்ட வங்கிக்கணக்கிற்கு மாற்றியுள்ள றாமராஜ் காரியாலயம் அமைக்கும் திட்டத்தைப் பிற்போட்டுள்ளார்.

இதனால் பணத்தை பறி கொடுத்த பரந்தன் இறாயன் பணத்தை உடனடியாக கட்சியின் இந்திய வங்கிக்கு மாற்றுமாறு பல மாதமாக கேட்டு வந்ததாகவும் தற்போது இருவருக்குமிடையில் பாரிய கருத்து முரண்பாடு வலுவடைந்திருப்பதாகவும் தெரிய வருகிறது.

இந்தப் பணத்தைச் சுருட்டுவதற்காக றாமராஜ் புதிய தந்திரத்தை கையாண்டுள்ளார். தனது வானொலியில் கடமையாற்றும் அறிவிப்பாளர் ஒவருக்கு கருத்து தெரிவிக்கையில் வடக்கை தாhயகமாக கொண்ட பரந்தன் றாயனை விட அதிகம் கருணாவை தான் நம்புவதாக தெரிவித்துள்ளார். பணத்தைச் சுருட்டுவதுடன் பிரதேசவாதம் கொண்ட இவர் தனது வாழ்விடமான கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கருணாவின் உதவியுடன் தனது கட்சியின் தலைமை பதவியை சுருட்டவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இந்தத் தகவலை கட்சியின் முக்கிய மத்திய குளு உறுப்பினரான மனோ மாஸ்டர் என அழைக்கப்படும் இராசரத்தினம் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் தமிழ் வெப் றேடியோ 01.02.2002
தனிமைப்பட்டுப்போன காந்திதேசத்தின் சேவகன்
கௌரிகாந்தன்
பரந்தன் றாஜனின் செவ்வி அண்மையில் நுனுNடுகு இன் அதிகார பூர்வ வானொலியான வுடீஊ யில் கேட்கக்கிடைத்தது.
முன்னரும் ஒரு தடவை வெலிக்கடைச்சிறை படுகொலை தொடர்பாக இதே வானொலி மூலமாக இவரது குரல் கேட்டது. இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் றாஜனின் குரல் ஒலிப்பது பல கேள்விகளை ஒலிக்க வைக்கிறது.

தற்போது நடைபெறப்போகும் தேர்தலில் தமிழ் கூட்டமைப்பின் தமிழ் மக்கள் மீதான தாக்கம் முன்னாள் துரோகிகளுக்கு புலிகளின் ஆதரவு வரப்போகும் புதிய அரசாங்கம் து}க்கியெறியப்படப்போகும் வரதர் டக்ளஸ் கூலிக்குழுக்கள் புதிய அரசுக்கான இந்தியாவின் மறைமுக பங்களிப்பு எனப்பலதரப்பட்ட அரசியல் சு10ழ்நிலையில் தான் றாஜனின் குரல் வுடீஊ வாயிலாக ஒலித்தது. சரி ஏன் அவசரப்பட்டு றாஜன் குரல் ஒலித்தது.

தற்போது நடக்கப் போகும் தேர்தலில் கூட்டாக ஒன்றிணைந்துள்ள வுநுடுழு நுPசுடுகு (சுரேஸ்) வுருடுகு 10 த.காங்கிரஸ் என்பன கடந்த காலத்தில் தமிழ் மக்களாலும் புலிகளாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள். தற்போது இக்கூட்டு முன்னணிக்கும் புலிகளுக்கும் ரகசிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அதன் பயனாகவே புலிகளும் தமிழ் மக்களும் இன்று இவர்களை இம்முறை தேர்தலில் அரசியல் ரீதியாக நிறுத்தி உள்ளதாக எல்லாத் தரப்பாலும் பேசப்படுகிறது.

ஆக முன்னாள் துரோகிகள் இன்று புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கே சென்று பிரச்சாரம் செய்யக்கூடிய நிலையைப் பெற்றுள்ளார்கள். என்பது பெரியதொரு மனமாற்றத்தையே புலிகளும் தமிழ் மக்களும் கூட்டமைப்பு தொடர்பாக கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை. அது எப்படி இருப்பினும் இந்தக் கூட்டு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருபுறம் இருக்க எதிர்வரும் காலத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தி ஜனநாயக ரீதியில் இக்கூட்டு முன்னணி குரல் கொடுப்பது என்ற நிலைப்பாடானது தமிழ் மக்கள் மத்தியில் இவர்கள் காலு}ன்ற வழி வகுத்துள்ளது என்று துணிந்த கூறலாம்.

இவர்களது நிலைப்பாடு இப்படியிருக்க சந்திரிக்காவின் அரசிலும் முன்னைய ருNP ஆட்சியிலும் சேவகம் செய்ததனால் தொழில் வாய்ப்புப் பெற்றுக்கொடுத்த நன்றிக் கடனுக்காக ஒரு சிறு தமிழ் மக்கள் கூட்டம் வரதருக்கும் டக்ளசுக்கும் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க வேண்டியவர்களாக உள்ளனர். இவர்களது இருப்புக்கூட சற்றுப்பரவாயில்லை.

ஆனால் ஒரு குழு மட்டும் நீண்ட காலமாக தமிழ்மக்களிடம் இருந்து அன்னியப்பட்ட நிலையில் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆட்களை வைத்துக்கொண்டு 'ஜெய்கிந்" என்ற கோசத்தைக்கொண்டு இயங்கும் நுNனுடுகு குழுவாகும். குறிப்பிட்ட இவர்களது நிலைப்பாடும் நீண்ட காலமாக தமிழ் மக்கள் மத்தியில் அன்னியப்பட்டுப்போன தொடர்புகளை மறுசீரமைக்க வேண்டிய தேவை நுNனுடுகு இனருக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இன்றும் சொல்லப்போனால் முன்னாள் துரோகிகள் எல்லோரையும் புலிகள் ஏற்றுக்கொண்டுள்ள சு10ழ்நிலையில் தாங்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமோ என்ற பயம்தான் றாஜனின் குரலில் மேலோங்கியிருந்தது எனலாம்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

பனிச்சங்கேணித் தாக்குதலுக்கு முன்னரே அரசு அறிக்கை

-நிதர்சனம்.கொம் : மட்டக்களப்பு -
வாகரைப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்கக்காவல் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு எத்தகைய இழப்புகளும் எற்படாத நிலையிலும் தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல் நடைபெற்றதாக இராணுவத் தரப்பு தகவலை மேற்கோள்காட்டி அரச ஊடகங்கள் ஊடாக, 7 விடுதலைப் புலிப் போராளிகள் உயிரிழந்ததாக செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.

வாகரைப் பிரதேசத்தில் மோதல்கள் எதுவும் இடம் பெறாத நிலையில் அப்பகுதி கிராம வாசிகள் மீது எறிகணைத் தாக்குதல் மேற்கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் ஊடகங்கள் ஊடாக தகவல் வெளிவந்தது. இதன்படி அந்த பிரதேசத்தை அண்டிய கிரிமிச்சை இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு சம்பவம் நடைபெற இருப்பது நிகழ்வுக்கு முன்னர் தெரிந்திருக்கிறது. இதனை அரசபடைகள் மழுப்பியுள்ளதுடன் சம்பவத்தை மறைக்க முற்பட்டுள்ளார்கள். இதே அரசு ஆட்சியில் இருக்கும் போது குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் குமாரின் கையில் அவருக்கான மரணஇரங்கல் கடிதம் சந்திரிக்காவிடம் இருந்து சென்றது அனைவரும் அறிந்த விடயம்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைக்க முயற்சி

-நிதர்சனம்.கொம் : மட்டக்களப்பு-
பிட்டும், தேங்காய் பூவும் போல இருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே மீண்டும் ஒரு இன வன்முறையை ஏற்படுத்த சில விஷமிகள் முயற்சிகள் மேற்கொண்டு வருவது கவலைக்; குரியது. இந்த இன வன்முறைக்குப் பின்னால் முஸ்லிம் அரசியல் கட்சி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்று பட்டு வாழ்ந்து வருகின்றனர். மொழியால் ஒன்று பட்டுள்ள இவ்விரு சமூகங்களும் கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமைப் பட்டிருப்பது அவசியமானதாகும். கடந்த போர்க்காலத்தில் இவ் விரு சமூகங்களிடையே கசப்பான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

தமிழ் இனத்தின் விடுதலைக்கு முஸ்லிம் சமூகமும் பக்கபலமாக இருப்பதை விரும்பாத சக்திகள் ஊடுருவி மேற் கொண்ட பல்வேறு சம்பவங்கள், படுகொலைகள் என்பன இன விரிசல்களை ஏற்படுத்திய போதும் தமிழீழ விடுதலைப் புலிக ளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்குப் பிற்பாடு தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான உறவைப் பலப்படுத்தும் நடவடிக் கைகளில் விடுதலைப் புலிகளும் அதிக அக்கறை செலுத்தினர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போர்க்காலச் சூழலில் முஸ்லிம்களால் செய்கை பண்ணப்படாத விவசாயக் காணிகளை மீள செய்கை பண்ணுவதற்குரிய ஒரு சூழல் ஏற் பட்டது. ஒவ்வொரு முஸ்லிம் பகுதிகளிலும் உள்ள பிரமுகர்கள் விடுதலைப் புலிகளைச் சந்தித்து தமது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது. இவ்வாறான சூழ் நிலையில் இரு சமூகங்களிடையேயான உறவு வலுப் பெற்று வருவதை விரும்பாத சக்திகள் வட்டமடு காணிப் பிரச் ;சினையை பூதாகாரமாக்க நினைப்பதும் அதன் மூலம் இன வன்முறையை து}ண்ட நினைப்பதும் வேதனைக்குரியது.

இந்த வேதனை தரும் சம்பவத்தின் பின்னணியில் அம்பாறை மாவட்டத்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சி இருப்பது கவலைக்குரியது. நேற்றைய தினம் வட்டமடு பிரச்சினையைக் காரணங்காட்டி நடத்தப்பட்ட ஹர்த்தால் தமிழ் முஸ்லிம் சமூகத்திடையே ஒரு பதட்டமான சூழலை ஏற்படுத்தியது.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நேற்று சில விஷமிகள் கலவரத்தை உண்டு பண்ணுவதற்கான முயற்சிகளிலும் ஈடு பட்டுள்ளனர். அதிஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்கும் சில தமிழர்கள் அக்கரைப்பற்றில் தாக்குதலுக்க உள்ளாகியுள்ளனர்.

சில தமிழர்களின் வர்த்தக நிலையங்களும் சேதப்படு த்தப்பட்டன. இச்சம்பவங்கள் நடைபெற்ற போது சிறிலங்காப் பொலிசார் அவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது எது வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காது வன்முறை யைத் து}ண்டும் போக்கில் பார்வையாளராய் இருந்தமை வியப்புக் ;குரியது.எனவே எதிர் காலத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இன முரண்பாடுகள் வன்முறை களுக்கு இடமளிக்கக் கூடாது. வட்டமடு காணிப் பிரச்சினையை மிகப்படுத்தாது பேசித்தீர்ப்பதுடன் இரு தரப்பினரும் புரிந்துணர் வுடன் நடந்து கொண்டு தமிழ் பேசும் சமூகத்தின் ஒற்றுமையைப் பலப்படுத்த உறுதி பூணுவோமாக.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]