www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

நிஜங்களின் அம்பலம்

சர்வதேச குற்றவாளிகளின் தலைவன் KTR-1

பருத்தித்துறை தம்பசிட்டியைத் தனது பூர்வீகமாகக் கொண்ட KT ராஜசிங்கம். ஆரம்பத்தில் நெல்லியடி கட்டைவேலி MPCS தலைவராக இருந்த போது பல இலட்சம் பணத்தை மோசடி செய்தவர். 1979ம் ஆண்டு இவ் மோசடி காரணமாக சிறீலங்காப்பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வந்த தலைமறைவானார். இதுதான் இவரது முதல் குற்றவியல் செயற்பாடு.

ஆயிரக்கணக்கான ஏழைகளின் பணத்தை மோசடி செய்த ராஜசிங்கம் உயர் சாதி வர்க்கத்தைச் சேர்ந்த சாதித்திமிர் பிடித்த சாதிவெறியன்.
SLAP ஆதரவாளரான துரோகி அல்பிரட் துரையப்பாவின் வடமராட்சி எடுபிடிகளில் ஒருவன். தெல்லிப்பழையைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து இரண்டு பெண்பிள்ளைகளின் தந்தை. ஒரு பெண் தாய்லாந்து சர்வதேச பாடசாலையிலும் , மற்றவர் சிங்கப்பூரிலும் கல்வி கற்றுக்கொண்டனர். இவரது மனைவி மிகவும் வயோதிபத் தோற்றமுடையவர் என்பதால் திருமணமாகாத மனைவியின் சகோதரியான **** என்பவருடன் தனது காமலீலைகளைப் பகிர்ந்து கொள்வார்.
இதேவேளை KTR தாய்லாந்திலுள்ள UNHCR இலும் தன்னைப்பதிந்து கொண்டார். மகள் UNHCR இல் மொழிபெயர்ப்பு வேலைகளும் செய்து வருபவர்.

1985ம் ஆண்டு முதல் தாய்லாந்தில் தனது தளத்தினை அமைத்துக்கொண்ட KTR ஆரம்பத்தில் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை ஏற்படுத்திக்கொண்டார். அத்துடன் இந்திய எண்ணைக் கம்பனிகளுடனும் சில வர்த்தக உறவுகளை சந்திரசாமி என சிலகாலங்களுக்கு முன்னர் நன்கு ஊடகங்களில் அறியப்பட்ட மோசடிப்பேர்வழியூடாக ஏற்படுத்திக்கொண்டார். இவருடைய இந்த வியாபாரங்கள் சட்டரீதியாக இப்படி இருக்க மறுவழியில் சட்டபூர்வமற்ற ஆட்கடத்தல் (AGENT) போதைவஸ்து வியாபாரம் குறைந்த சம்பளத்தில் தாய்லாந்து இளம் பெண்களை கூலிக்கமர்த்தி விபச்சாரத்தொழில் என்பன இந்தியா இலங்கை என விஸ்தரிக்கப்பட்டது.

சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு கசீனோ கிளப்பிலும் மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட தாய்லாந்துப்பெண்கள் கைது செய்யப்பட்ட செய்திகளை பத்திரிகைகளில் யாவரும் வாசித்திருப்பீர்கள். இவ்விபச்சாரத் தொழிலில் முவுசு இற்கும் சம்பந்தமிருந்தது. இதுபற்றிய விரிவான செய்திகள் இன்னொரு கட்டுரையில் தருகின்றேன்.
KTR தனது கறுப்புப்பணத்தை வெள்ளைப்பணமாக மாற்ற எடுத்த பல வியாபார முயற்சிகள் நட்டத்தில் போக மிகவும் பணக்கஸ்ரத்துக்குள்ளானார். இதையடுத்து தன்னிடமிருந்த BMW , BENZ கார்களைக்கூட விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்பது முவுசு இன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிக துன்பகரமான காலம் எனலாம்.
எப்போதும் தன்னை ஒரு பெரிய தொழில் அதிகாரியாகவும் , ஆங்கிலப்புலமையுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் KTR ஒரு படி மேலே சென்று அங்கோலா அரசாங்கத்தின் ஓர் ஆலோசகராகவும் செயற்பட்டதாகவும் தன்னைப்பற்றி அறியாதவர்களிடம் கூறிக்கொள்வார். KTR தன்னைப்பற்றிய மாயைகளை எப்போதும் தன்வசம் வைத்துக்கொள்வதில் மிகவும் வல்லவர்.

ஒமேகா வரதனுக்கும் KTR இற்கும் இடையேயான தொடர்பு.
தாய்லாந்தில் ஆரம்ப காலங்களில் தடம்பதித்தவர்களில் ஒமேகா வரதனும் ஒருவர். இவரும் முவுசு ம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதில் சேர்ந்தே செயற்பட்டனர். அதே போன்று போதைவஸ்து வியாபாரத்திலும் சேர்ந்தே செயற்பட்டனர். ஆட்கடத்தலும் , போதைவஸ்தும் பின்னிப்பிணைந்தே ஐரோப்பாவிற்குச் சென்றது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய். எமது தமிழ்ப்படங்களில் சுட்கேஸ் மாற்றுவதைப் பார்த்திருப்பீர்கள் தானே இதுபற்றி அதிகம் விபரிக்கத்தேவையில்லை.
ஒமேகா வரதன் என்ற பெயர் எப்படி வந்தது ? என்பதனை வாசகர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டாமா ?

வரதன் தாய்லாந்தில் உள்ள 'ஒமேகா" கொட்டலில் தான் வரும் பயணிகளை தங்க வைப்பார். அதனால் பயணிகள் வைத்த பெயர்தான் ஒமேகா வரதன். இவருக்கு வேறு பெயரும் உள்ளது. அது இதனை எழுதும் போது ஞாபகத்துக்கு வரவில்லை. பின்னைய காலங்களில் வரதன் தனது றுட்டால் வேறு பயண முகவர்கள் ஆட்களை அனுப்பும் நடைமுறைகளை கையாண்டால் தாய்லாந்து பொலிசாருக்கு அதிலிருந்து அடிபட வைத்து விடுவார். இவரால் நட்டமடைந்த பல ஏஜென்சிக்காரர்கள் பாங்கொக் தெருக்களில் திரிகிறார்கள். இப்போது ஒமேகா வரதன் இங்கு ஓர் கொம்பனி ஒன்றினை சட்டபூர்வமாக நடத்தி வருகின்றார்.

1985ம் ஆண்டு புளொட் இயக்கத்தால் நிக்கவெரட்டியாவில் ஓர் வங்கிக்கொள்ளை இடம்பெற்றது. அக்காலத்தில் மிகவும் பிரபல்யமான கொள்ளை வாமதேவன் , ஜிம்பிறவுண் உதயன் ஆட்களால் இது நிகழ்த்தப்பட்டது. இவ் வங்கிக் கொள்ளையில் கொள்ளையிடப்பட்ட நகைகளை முன்னர் நகைக்கடையில் வேலை செய்த அனுபவத்தால் அவற்றை விற்று பணமாக்க முஸ்தபா என்ற ராம்ராஜ்ஜிடம் கொடுக்கப்பட்டது.

இங்குதான் ராம்ராஜ்ஜின் அரசியல் பிரவேசம் பற்றியும் அறிந்திருக்க வேண்டிய விடயம் வருகின்றது. மலையகம் உடபூசல்லாவை பூர்வீகமாகக்கொண்ட வீரைய்யாவின் மகனான ராம்ராஜ் நகை வேலைக்காக மட்டக்களப்பில் வேலைபார்த்து வந்தார்.இந்நேரம் இவரது முதலாளி சிங்கப்பூருக்கு வியாபார நோக்கமாகச் சென்றிருந்தார். இந்நேரத்தில் MP - ராஜதுரை அவரது நகைக்கடைக்கு வந்த இடத்தில் ராம்ராஜ் உடன்கூட கடையில் இருந்தவர்கள் கள்ளன் ஒருவன் வருகின்றான் அவனைப்பேசும்படி கூறி பப்பாவில் ஏற்றியுள்ளார்கள். இவர் இராஜதுரையை எதிர்த்துப் பேசியதால் மட்டக்களப்பில் எதிராகப்பேசிய ஆளென முத்திரை குத்தப்பட்டார். தான் பின்னர் புளொட் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

இந்த நகைக்கடை அனுபவம் தாய்லாந்து , சிங்கப்பூர் என பிரயாணம் செய்யத்தொடங்கிய ராம்ராஜ்ஜிற்கு தாய்லாந்தில் KTR இன் தொடர்பும் அறிமுகமும் கிடைக்கிறது. இதுவே பின்னர் புளொட்டுக்கான போதைவஸ்து வியாபார ரீதியாக ராம்ராஜினை மாற்றியது. அதைவிட நிக்கரெட்டிய நகைகளை ராம்ராஜ் தனது பணமாக மாற்றி சுறையாடியது வேறுகதை.

1990ம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் நிர்க்கதியான ENDLF இயக்கத்தினரில் பலர் ஆட்கடத்தலையே தமது பிரதான தொழிலாகக் கொண்டு இப்போதும் செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் மையவழியாக தாய்லாந்தில் உள்ள MP ராஜசிங்கம் ராம்ராஜினால் இவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இந்தியாவில் இவர்களுக்கு உறுதுணையாக 2பிரிவினரும் இந்திய விமான நிலையக் கட்டுப்பாட்டாளர்களும் ENDLF இனரால் லஞ்சம் கொடுக்கப்பட்டு எந்தவொரு தங்குதடையுமின்றி ஆயிரக்கணக்கான பயணிகள் முவுசு ஊடாகவும் ஒமேகா வரதன் ஊடாகவும் ஐரோப்பாவிற்குக் கடத்தப்பட்டனர். இந்தியாவில் இருந்து நுNனுடுகு சார்பான அன்ரன் , முறிகண்டிக்கேடி , பேரின்பம் , இராசரெத்தினம் (மனோமாஸ்ரர்) குட்டி என்போர் ஆட்கடத்தல் வேலைகளைச் செய்து வருகின்றனர்.

கனடாவில் இவர்களுக்கான முகவர்களாக சில்வெஸ்ரர் , டக்ளஸ் (மொன்றியல்) என்போரும் இவர்கள் திரைப்பட நட்சத்திரங்கள் , பாடகர்களை கனடாவிற்கு அழைக்கும் நிகழ்ச்சி நிரலில் பயணிகளையும் சேர்த்துக் கொள்வார்கள். பிரித்தானியாவிற்கான முகவர்களான போல் , ராம்ராஜ் , சந்திரகுமார் (அசோக்) ஆகியோரும் செயற்படுகின்றனர். திசநாயக்கா திடீரென இறந்ததால் திசாநாயக்காவுக்கு கொடுக்க வேண்டிய பல மில்லியன் பணத்தை ENDLF
தனதாக்கிக் கொண்டார். தற்போது இங்கு பாங்கொக்கில் இருக்கும் முன்னர் இராணுவத்திலிருந்த சாந்த என்ற சிங்களவருடன் சேர்ந்து இவ்வாறான தொழிலில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக அறியமுடிகின்றது. சாந்தவும் ஜப்பான் , கொரியா ஆகிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்புபவர்.
KTR இன் ஐரோப்பாவுக்கான சட்டவிரோத செயற்பாடுகளை மறைக்கும் முகமாக 'ஏசியன் ரிபியூன்" இணையத்தளத்தை நடாத்தி தனது இன்னோர் முகத்தை மறைக்க முயல்கிறார் KTR.

உண்மையான அரசியல் அகதிகளை நிராகரிக்கும் மேற்குலகம் இன்று KTR அங்கீகரித்து UNCHR சுவீடனுக்கு அனுப்பி வைத்துள்ளதுதான் இன்றுள்ள உண்மையான அகதிகளின் சோகம்.இப்போது தனது இணையத்தளத்தை புலிகளுக்கு முற்றுமுழுதாக எதிரான செய்திகளைச் சொல்லும் ஊடகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பாக 'ஏசியன் ரிபியூன் " இயங்கி வருகிறது என்பதே உண்மை.

-தாய்லாந்திலிருந்து மட்டகளப்பு மாஞ்சேனை பொன்னம்பலம் சுந்தர்.
CRISTI
ASSOCIATION OF CHRISTIAN TAMIL IN SIAM (ACTS) SUKKUMVIT
BANKOK 10110

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

சாய்பாபா ரகசியம்?

ஸ்ரீ சத்ய சாய்பாபா
இந்தியாவின் மிகப் பிரபல சாமியார் ஸ்ரீ சத்ய சாய்பாபாவை சூழ்ந்துள்ள பாலியல் சர்ச்சைகள் குறித்து பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு புலனாய்வு நிகழ்ச்சியின் வானொலி வடிவம்.


பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பெற்றவர் ஸ்ரீ சத்ய சாயிபாபா.

இந்த பக்தர்களுக்கு இவர் மண்ணில் மனித உருவில் வாழும் கடவுள். ஆனால் பிபிசி நடத்திய ஒரு புலனாய்வு சாய்பாபாவுக்கு கருநிழல் படிந்த ஒரு மறுபக்கம் இருப்பதாக தெரிவிக்கிறது.
தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் புட்டபர்த்தி என்னும் இடத்தில் உள்ள இவரது தலைமை ஆசிரமத்திற்கு அரசியல்வாதிகள் உள்ளிட்டு பலதரப்பட்ட உயர்மட்ட பிரமுகர்கள் வந்து பாபாவை தரிசித்துச் செல்வது வழக்கம்.

இவரது பக்தர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் பரவி இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து தரிசனத்துக்காக வந்த ஒரு விடலைப் பையனிடம் பாபா, பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டதாக அவனது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த குற்றச்சாட்டு பற்றி பிபிசி தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட ஒரு புலனாய்வு நிகழ்ச்சியின் வானொலி வடிவம் இந்த தமிழோசை பெட்டகம்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

கலாச்சாரத்துக்கு கண்ணிவெடி?-1

-எழுதியவர்: ஒஸ்லோவில் இருந்து சேது-

கலோ ரஸ்ட் நிறுவனம் ஒரு வருமானத்தை தேடாத மதரீதியான தொடர்புகளை பேனாத அரச சார்பு அற்ற நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது பிரித்தானியாவில் இதன் பதிவு இலக்கம் 1001813 ஆகும் அமரிக்காவிலும் இது ஒரு அரசசார்பு அற்ற நிறுவனமாக பிரவு 501 சீ பிரிவின் செக்சன் 3 ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது 25 பிரித்தானிய பிரஜைகள் 950 உத்தியோகத்தர்களுடன் 12 வருடங்களுக்கு முதல் பிரித்தானியாவில் ஊழடin ஆவைஉhநடட என்பவரால் தனது மனைவி நண்பர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. இவர் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் அதுமட்டுமில்லாமல் பிரித்தானிய இராணுவ கேணல் தர அதிகாரி.

பிரித்தானிய அயர்லாந்து பிரச்சனையில் மிக முக்கிய பங்குவகித்தவர். சுமார் 5500 உத்தியோகத்தர்களை தன்னகத்தில் வைத்திருக்கும் இந்த நிறுவனம் மத்திய ஆசியா கிழக்கு ஆசியா தெற்கு ஆசியா தென் ஆபிரிக்கா போன்ற பிரதேசத்தில் சேவையை செய்துவருகிறது. இந்த நிறுவனம் கடந்த காலத்தில் 10 000 நிலக்கண்னி வெடிகள் 25 000 ஆயிரம் தொன் வெடிக்காத செல்கள் போன்றவற்றை பொஸ்னியா யோர்ஜியா ஆப்கானிஸ்தான் அங்கோலா கம்போடியா போன்ற நாடுகளில் மீட்டு அளித்திருக்கிறார்கள்.

ரஷ்ய பெடறல் புலனாய்வுப்பிரிவு கலோ றஸ்ட் நிறுவனம் செச்னிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சிகளை கொடுப்பதாக கண்டறிந்தது.இதனால் இந்த நிறுவனம் செச்சினியாவில் இருந்து வெளியேறவேன்டும் என கேட்டிருந்தது. 1997 ஆன்டு ரஷ்ய நிலைகளை உளவு பார்த்துவந்தததாக ரஷ்ய புலனாய்வுத்துறை அறிவித்தது 1999 ம் ஆண்டு நவம்பர் மாதம் செச்சினிய கிராமம் ஒன்றில் கலோரஸ்ட் நிறுவனத்தவர்கள் பயிற்சி கொடுக்கும்போது ரஷிய படைகள் அவர்களை கைப்பற்றியதாக ரஷ்ய புலனாய்வுப்பிரிவு ஊடகமாநாடு ஒன்றில் தெரிவித்தது.பிரித்தானிய உளவுப்படையினர் இதில் வேலை செய்வதை ரஷ்ய உளவுத்துறை உறுதி செய்தது. இவற்றால் இவர்கள் செச்சினியாவில் சேவையாற்ற முடியாமலும் போனது.


இந்த நிறுவனம் இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களை ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியலேயே வடக்கு கிழக்கில் சேவையாற்றிகொன்டு இருந்தது. இந்த நிறுவனத்தில் இலங்கையின் வடமுனைகளில் தமிழ் இளைஞர்களான சங்கர் மற்றும் ஜெயகுமார் போன்றவர்கள் வேலை செய்கிறார்கள். இதே நேரம் மொசாம்பிக் நாட்டில் இருந்தும் பலர் இந்த நிறுவனத்தின் சேவைக்கு என அழைத்துவரப்பட்டார்கள். இவர்கள் வேறு பல நாடுகளில் கடமையாற்றி எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கிறார்கள்.

யாழ்மாவட்டத்தில் இவர்களுடன் இந்த நிறுவனத்தில் வேலைசெய்யும் சங்கர் போன்றவர்களின் உதவியுடன் தமிழ் பெண்களுடனான தொடர்பு இந்த மொசாம்பிக் நாட்டவர்களுக்கு கிடைத்திருக்கிறது இதன்மூலம் இவர்கள் காவிவந்த எயிட்ஸ் நோய் யாழ் மாவட்ட தமிழ் பென்களுக்கு பரவி இருக்கிறது. இந்த திட்டமிட்ட கலாச்சார சீரழிவு யாழ் பல்கலைக்கழக வளாகம் வரை பரவி இருப்பதாகவும் இதற்கு இந்த நிறுவனத்தின் தமிழ் உத்தியோகத்தரே காரணம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சங்கர் என்ற இந்த அதிகாரியின் தகப்பனார் மிகப்பெரிய ஒரு கல்விமான் (இராயேந்திர பிரசாத்)தாயார் ஒரு மருத்தவதாதி இருவரும் பலகலைக்கழகத்தில் கடமையாற்றுபவர்கள். இவர்களும் ஜரோப்பிய கலாச்சாரத்தில் யாழ்மாவட்டத்தில் குடும்பவாழ்கை வாழ்ந்த வருகிறார்கள்.

இந்த சங்கர் என்பவர் மேற்கொன்டு வரும் சீரழிவான செயல்களாலும் கடமையாற்றும் பிறநாட்டு அதிகாரிகளின் தேவைகளை இவர் பல வழிகளில் தமிழ் பெண்களை பயன் படுத்தி பூர்த்தி செய்து வருவதாலும் நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் பிறநாட்டு அதிகாரிகளும் இவருடைய கருத்துகளுக்க ஒத்துப்போகும் ஒரு நிலை யாழ் மாவட்டத்தில் காணப்படுகிறது.
தனது பாலியல் இம்சைகளுக்க ஒத்துவராத தமிழ் பெண் உத்தியோகத்தர்களை சேவையில் இருந்து இடைநிறுத்துவதும் தனது கருத்துக்களுக்கு அடிபணியாத உத்தியோகத்தர்களை ஆங்கிலவார்த்தைகளில் கெட்டவார்த்தைகளில் திட்டி தீர்பப்துமாக இவருடைய அடாவடித்தனங்கள் தலைவிரித்தாடியவண்ணம் இருக்கிறது. இந்த சங்கர் ஜெயகுமார் போன்றவர்களின் கட்டாய பாலியல் இம்சைகளுக்கு பல தமிழ் பெண்கள் இந்த நிறுவனத்தில் உள்ளாகி இருக்கிறார்கள். பல தமிழ் பெண்கள் சேவையில் இருந்து விலகியும் சில பெண்கள் கட்டாய திருமணங்களுக்கம் உள்ளாகி இருக்கிறார்கள்.

பலசந்தர்ப்பத்தில் சங்கர் என்ற அதிகாரிக்கும் ஜெயகுமார் என்ற அதிகாரிக்கும் நலன் விரும்பிகள் பலதடவை ஆலோசனை கூட கொடுத்திருக்கிறார்கள். இப்படியான கலாச்சாரா சீரழிவான தவறான வேலைகளை செய்யவேன்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டும் அவருடைய அந்த அடாவடித்தனங்கள் அரங்கேறிக்கொன்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் முறைகேடுகளை வெளியே பத்திரிகைகளுக்கும் வேறு ஊடகங்களுக்கும் தெரிவிப்பவர்கள் என சந்தேகிகக்கப்படுவோர் பலர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

யாழ் போதனா வைத்திய சாலையில் நடக்கும் மர்மம் என்ன?

- புஷ்பபரன்- நன்றி: வீரகேசரி (24.06.04)

குடாநாட்டு மக்களின் அன்றாட வாழ்வுடன் பிரிக்கமுடியாத பின்னிப்பிணைந்ததொன்று குடாநாட்டில் வாழும் 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்களது வைத்திய தேவைகளை ஓரளவுக்கேனும் நிறைவு செய்துவருவதில் அதற்கே பெரும் பங்குண்டு.

குறிப்பாக கடந்தகால யுத்த அனர்த்தங்களால் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களது வெளியேற்றங்களினால் குடாநாட்டிலுள்ள பெரும்பாலான பிரதேச வைத்தியசாலைகளின் பணிகள் முடங்கிப்போயுள்ளன.

குறிப்பாக மந்திகை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை என பல ஆதார வைத்தியசாலைகளதும் மாவட்ட கிராமிய வைத்தியசாலைகளதும் செயற்பாடுகள் பெருமளவு முடங்கிப்போயுள்ளன.

இந்நிலையில், இவை அனைத்தையும் தாண்டி குடாநாட்டிலுள்ள மக்களுக்குமான சுகாதார சேவையினை வழங்கவேண்டியதோர் நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை இருக்கின்றது. எனினும் கடந்த காலங்களில் தனது வரலாற்றுக்கடமையை உணர்ந்து போதனா வைத்தியசாலை தனது கடமைகளை ஆற்றியிருக்கின்றது.

1987 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வைத்தியசாலையினுள் ஆக்கிரமித்து நுழைந்த இந்தியப் படையினருக்கு தனது பெறுமதிவாய்ந்த வைத்திய நிபுணர்களையும் சக பணியாளர்களையும் அது காவு கொடுத்திருக்கின்றது.

1987, 1990 என தொடர்ந்த வௌ;வேறான இராணுவ மோதல்களின் போதெல்லாம் மருத்துவ நெருக்கடியை எதிர்த்துப் போராடி மக்களுக்கு தனது சேவைகளை யாழ். வைத்தியசாலை நல்கியிருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக 1990 ஆம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டிருந்த மருந்துப்பொருட்களின் தடையையும் மீறி எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அந்த வகையில் தனது சேவைகளை முன்னெடுத்திருந்தது.

ஆனாலும் அண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவி வரும் சூழல், அதன் கடந்தகால அர்ப்பணிப்புக்களையெல்லாம் கேலிக்குரியதாக்கிவிடுமோ என்ற அச்சமே எழுகின்றது.

அவற்றில் தற்போது முனைப்புப் பெற்றுள்ளது வைத்தியசாலையினுள் நிலவிவரும் பாலியல் hPதியான துஷ்பிரயோகங்கள், அது உயர்மட்டம் முதல் சாதாரண தொழிலாளர் மட்டம் வரை வியாபித்திருக்கின்றதாக கூறப்படுகின்றது.

வைத்தியசாலை வளவினுள் மூன்று நாட்களுக்கு மேலாக தங்கிநின்று பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள் மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு யாழ். நீதிமன்றில் முன்பொரு சந்தர்ப்பத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண் தனது ஆறு வயது மகனுடனேயே தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், இவ்வாறு ஆஸ்பத்திரியினுள் வாரக்கணக்கில் தங்கியிருந்து தொழிலில் ஈடுபடுவோர் பலர் இருப்பதாக தெரிவிக்கும் வைத்தியசாலையின் பணியாளரொருவர் இவ்விடயத்தில் இங்குள்ள சிலருக்கும் நெருங்கிய தொடர்புகளிருக்கலாமெனவும் கூறுகின்றார்.

எனினும் அண்மைக்காலங்களில் அதிகாரியொருவரை தொடர்புபடுத்தி வெளிவந்த பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான செய்தியே தற்போது பெரும் சர்ச்சைகளை கிளப்பிவிட்டுள்ளது.

அங்கு பணியாற்றிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை திடீரென யாழ். மாவட்டத்திற்கு வெளியே இடமாற்றம் செய்ய முற்பட்டிருந்தமையே இப்பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய செய்தி வெளிவர முக்கிய காரணமாக இருந்தது. இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பொது சுகாதாரப் பரிசோதகர் இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்திற்கு செய்துள்ள முறைப்பாட்டில் இவ்வாறானதொரு பாலியல் துஷ்பிரயோகத்தை நேரில் கண்டிருந்தமை மற்றும் அதனை அம்பலப்படுத்திய சம்பவங்களின் பின்னணியிலேயே தான் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் அதிகாரியொருவருக்கும் சக பெண் மருத்துவ அதிகாரிக்கும் இடையே இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் தொடர்புகளே தற்போது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

குறித்த அதிகாரி தனது அலுவலகத்தில் இரவு வேளையில் குறிப்பிட்ட பெண் மருத்துவருடன் தனித்திருந்த வேளையில் அதனை அம்பலப்படுத்தியதாக அப்போது சுகாதாரப் பரிசோதகர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாக உள்ளக தகவல்கள் சிலவும் தெரிவிக்கின்றன.

இதனை குறித்த பொதுசுகாதார பரிசோதகர் இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலக விசாரணை அதிகாரிக்கு வழங்கிய வாக்குமூலத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே குறித்த பொது சுகாதார பரிசோதகர் மீது குறைகூறும் வகையில் யாழ். போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சில வைத்திய நிபுணர்களது ஒப்பமிடப்பட்ட மகஜரொன்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ நிபுணர்கள் குழு, வைத்தியசாலையில் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்தும் வகையிலான மகஜரொன்றை கையளிக்க முற்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த மருத்துவ நிபுணர்கள் குழு தம்மை நேரில் சந்தித்து உரையாடியதை உறுதிப்படுத்தியுள்ள ஆணைக்குழுவின் விசாரணையாளர்கள் எனினும் அவ்வாறான மகஜரெதுவும் இதுவரை அவர்களால் கையளிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

இக்கட்டுரையின் நோக்கம் குறித்த மருத்துவ அதிகாரிகளது தனிப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விமர்சிப்பதல்ல.

சமூகத்தில் உயர்ந்த பதவிநிலைகளில் உள்ளோர் விடும் தவறுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் மீது எவ்வாறான பாதிப்பை உருவாக்குகின்றது என்பதை உணர்த்துவது மட்டுமே. அதற்கு அண்மையில் இடம்பெற்று தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் இப்பிரச்சினை நல்லதோர் உண்மையே.

எவர் உடன்பட்டாலும், உடன்படாவிட்டாலும் யாழ். போதனாவைத்தியசாலையின் நிர்வாக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவினையே இச்சம்பவங்கள் அப்பட்டமாக உணர்த்தி நிற்கின்றன.

தவறுகள் திருத்தப்பட வேண்டியவையன்றி நியாயம் கற்பிக்கக்கூடியவையல்ல. அவற்றை உணர்ந்து பழிவாங்கும் நோக்கிலான இடமாற்றங்கள் மேற்கொள்வது சீர்செய்யப்படவேண்டும். நிர்வாக கட்டமைப்புகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

வெறுமனே மருந்துகள் இல்லை. பணியாளர்கள் இல்லை. நவீன உபகரணங்கள் இல்லை எனக் கோஷங்கள் எழுப்புவதை விடுத்து உள்ள வளங்களைக் கொண்டு ஆரம்ப கட்டமைப்புகள் உறுதிப்படுத்தப்படவேண்டும். அடுத்த கட்டமாக இல்லாதவைகளை தேடிக்கொள்வது பற்றி ஆலோசிக்கலாம். அதற்கு முதலில் நிர்வாக கட்டமைப்பு ஒழுங்கமைப்புடன் இருக்கவேண்டும். சக வைத்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களது முழுமையான பங்களிப்பை அதற்கு பெற்றுக்கொள்ளவேண்டும்.

தற்போதுள்ளது போன்று இழுபறிகள் தொடருமானால் பெருமளவில் பாதிக்கப்படப்போவது நோயாளர்களே. யாழ். போதனா வைத்தியசாலையை பொறுத்தவரை பெருமளவிலான நோயாளர்கள் விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்தும் சிகிச்சைக்காக வருகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரச வைத்தியசாலைகளிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கே அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் நோயாளர்களினால் தற்போது சிகிச்சைபெறும் நோயாளர்களது எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கிறது.

இவ்வாறானதோர் சூழலில் உள்ளக சர்ச்சைகள் மக்களிற்கான முழுமையான சேவைகளை நல்கமுடியாததோர் நிலையையே தோற்றுவிக்கும். குறிப்பாக யாழ். போதனாவைத்தியசாலையில் பணியாற்றும் பெரும்பாலான வைத்தியநிபுணர்கள் வெளியே தனியார் 'கிளினிக்" களில் சேவை ஆற்றுபவர்களாக உள்ளார்கள்.

நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை வருமானமாக திரட்டிக்கொள்ளும் இவர்களில் பலர் இந்த நிர்வாக பிளவிற்குத் தூபம் போடுபவர்களாக இருப்பதாக ஆர்வலர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சாதாரண கடமை நேரத்தில் வைத்தியசாலையில் தமது சேவைகளை முழுமையாக வழங்காத இவர்கள் தமது தப்புத்தாளங்களை மூடிமறைக்க ஒரு சாராருக்கு சார்பாக செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

எது எப்படியிருப்பினும் சாதாரண குடாநாட்டு மக்களுக்குச் சொந்தமாக உள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையே. ஏனைய இடங்களைப்போன்று தனியார் வைத்தியசாலைகள் எனச் சொல்லிக்கொள்ளத்தக்கதான எந்தவொரு வைத்தியசாலைகளும் இல்லாத நிலையில் அனைத்து தரப்பினதும் நம்பிக்கையும் யாழ். போதனா வைத்தியசாலை மேலே இருக்கின்றது. இதனை உரிய தரப்புகள் புரிந்துகொண்டாலே போதுமானது.

(இக்கட்டுரை தமிழ்நாதம்.கொம் இல் அருந்து பெறப்பட்டது)

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

தடம் புரள்கிறது யாழ்ப்பாணம்!

-யாழிலிருந்து குரு-[நன்றி:தமிழ்நாதம்]

யாழ்ப்பாணத்தைப் பற்றி பெருமை பேசுகின்ற யாழ்ப்பாணத்தவரே அதிகம். ஒருகாலத்தில் அப்படித்தான் பெருமை பேசும் வகையில் இருந்தது. ஆனால் இன்று எல்லாத் திசையிலும் தனது சரியான பாதையிலிருந்து தவறி தடம்புரண்டு செல்கின்றது. உள்நாட்டுப் போர் நடக்கின்ற எல்லா நாடுகளைப்போலும் சீரழிவுகள் நடக்கத்தான் செய்யும் என பொதுவான காரணம் பலர் சொல்லி வாதிடலாம்.

இருப்பினும் சில சந்தர்பங்களில் தவறுகள் திட்டமிட்டு அல்லது விபரம் அறியாமல் நடந்து கொண்டிருக்கின்றன. அனேகமான தமிழர்கள் தேசவிடுதலையில் கவனத்தை செலுத்த, சாதாரண மக்கள் சரியான வழிநடத்தல் இன்றி தடம்புரள்வது தவிர்க்க முடியாதது. இருந்தாலும் வழிகாட்ட வேண்டியவர்களும் (பத்திரிகைகள், பத்திரிகை ஆசிரியர்கள்) தடம்புரள்வதும் அதன் விளைவாக வழிநடத்தப்படுவர்கள் தடம்புரள்வதும் தான் வேதனைக்குரியது.

கல்வி

தமிழர்களின் எதிர்காலம் கல்வியில்தான் முற்றுமுழுதாகத் தங்கியிருக்கின்றது என நம்பிச் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருக்கும்போது கூடக் கல்வியைக் கட்டியெழுப்பியவர்கள்தான் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள். மாணவர்களுக்கு கல்வியில் காட்டப்பட்ட துரோகத்தனத்தால் எழுந்ததே இந்த விடுதலைப் போராட்டம் என்பதும் யாவரும் அறிந்ததே!

கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் காரணமாக குடாநாட்டில் அரச பாடசாலைகளில் கற்பித்தலில் ஏற்படும் குறைபாடுகளைப் போக்கவும், சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

நாவலர் கலாசார மண்டபத்தில் இவ்வாறான நிகழ்வுகளுக்கு அனுமதி அளிப்பது எந்த வகையில் கலாசாரம் என்று இதற்கான அனுமதியளித்த மாநகர சபையினரும் அதன் நலன் விரும்பிகளும் விளக்கம் தருவார்களா?

பிற்பட்ட காலப்பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்களின் தேவை குடாநாட்டில் அத்தியாவசியம் எனக் கருதப்பட்டது. அதாவது பரிசோதனைக் கூடங்கள் எதுவும் பாடசாலைகளில் முற்றாக இயங்காத நிலையில் விஞ்ஞான பாடங்களை சில ஆசிரியர்கள் ரியூசன் கொட்டகையில் கற்பனையில் செய்து காட்டியமை அளப்பரிய சாதனைகளே. சில ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையால் பயன்பெற்றோரில் நானும் ஒருவன். அந்த வகையில் நன்றிக்குரியவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களும் அதன் ஆசிரியர்களும்.

ஆனால் இன்று நிலைமை வேறு, தொடர் போரினாலும், 1995 குடாநாட்டு இடப்பெயர்வினாலும் அதிகளவில் மனதில், பண்பாட்டில், ஒழுக்கத்தில் உறுதிமி;க்கவர்களில் பெரும்பாலோனோர் குடாநாட்டை விட்டு வெளியேறவும் மிகுதியாக இருந்தவர்கள் பலமில்லாது போகவும், சமுதாயத்தின் ஒழுங்குமுறைகள் தலைகீழாக மாறத்தொடங்கியது.

முன்னெடுக்கப்படும் ஒரு விடயம், காலம் செல்லச்செல்ல அவற்றில் உள்ள குறைபாடுகள் நீங்கி முற்றிலும் கூர்ப்படைந்து நல்ல நிலைக்கே வருவது வழமை (கூர்ப்புக்கொள்கை). ஆனால் யாழ்ப்பாணத்தில் அனேகமான செயல்கள் இயற்கை விதிகளுக்கே முரணான வகையிலேயே அண்மைக் காலங்களில் மாற்றம் பெற்று வருகின்றன.

ஒரு காலத்தில் (1995ற்கு முன்) அத்தியாவசியமாக கருதப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று, அழகு கலைப்பயிற்சி வகுப்புக்களுக்கு மாணவர்களைப் பதிவு செய்யும் இடமாக மாறியுள்ளது. ஏககாலத்தில் பாடசாலைப் பாடங்களுக்கான கற்பித்தலும் நடைபெறுவதனால், இந்த மேல்நாட்டு மோகத்தில் தவறிப் போவதும் மாணவர்களே.
12.06.2004 குடாநாட்டின் பிரபல பத்திரிகையில் வெளிவந்த விளம்பரங்கள்


அண்மைக் காலமாக புதிது புதிதாகக் குடாநாட்டில் தோன்றிவரும் அழகுப் பயிற்சி மையங்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் நிபுணர்கள் என்றும், பெண்களுக்கான பிரத்தியேகமான பயிற்சி என்றும் குடாநாட்டுப் பெண்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் வியாபார உத்திகள் அதிகமாகவே காணப்படுகின்றது. இவை நம்மில் சிலருக்கு பெருவாரியான பணத்தை அள்ளிக் கொடுப்பதால் தாம் சமுதாயத்திற்கு செய்யும் துரோகத்தனத்தையும் புரிந்தும் புரியாததுபோல் துணை போகின்றனர்.

பெண்கள் தம்மைச்சுழ இருந்த அடிமைத்தளைகளை உடைத்து, பெண்களே படைநகர்த்தி போராடி தங்களது ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கும் காலகட்டத்தில், சில சக்திகள் பெண்களில் காணப்படும் சில பலவீனங்களைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யவும் சமுதாயத்தை பிழையான வழிகளில் வழிநடத்தவும் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடுகின்றன. விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுப்பதும், அதன் முனைப்பை கெடுத்து அழித்து கொச்சைப்படுத்த நினைப்பதும் தேசத்துரோகம். சமுதாயத்தை, அங்குள்ள மக்களை பிழையான வழியில் நடத்திச்சென்று சீரழிப்பதும் தேசத்துரோகமே என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அதாவது இன்று அழகுப்பயிற்சி, மணப்பெண் அலங்காரம் என்று சொல்பவர்கள் தங்களுக்கு இடையில் போட்டிகள் நடாத்தி பரிசில்கள் கொடுப்பார்கள், பின்பு இங்குள்ள வெளிநாட்டுத் தொடர்புகளைப் பயன்படுத்தி சமாதானத்திற்காக உலக அழகிப்போட்டி என்று ஏதாவது சொல்லி பெண்களை உலக சந்தைக்கு அனுப்புவார்கள். இவ்வளவும் நடந்தபின்பு தான் இங்குள்ள பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கவும், ஆர்ப்பாட்டம் செய்யவும் ஆரம்பிப்பார்கள். ஆகவே விபாPதங்களை முளையில் கிள்ளிவிடுதலே நல்ல சமுதாய வாழ்விற்கு ஏற்ற வழி. நல்ல கட்டுக்கோப்பான அமைதியான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர் வாழ்வு காலஓட்டத்தால் கீழ்நோக்கி சென்று மக்களின் வாழ்வு துன்பமடைய கற்றவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

குடாநாட்டு ஊடகங்கள் இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டாமல் மௌனம் சாதிக்கின்றது. அத்தோடு நின்றுவிடாமல் இவற்றுக்கு துணைபோகின்றது. (பிரபல பத்திரிகைக் காரியாலயத்திற்கு சொந்தமான கட்டிடத்திலேயே முன்பு பல பயிற்சிகள் நடைபெற்றறதும் குறிப்பிடத்தக்கது.) பெண்கள் சம அந்தஸ்து பெறவேண்டும், பெண்ணடிமை உடைக்கப்பட வேண்டும். அதற்காக அவர்களுக்கு சிறந்த கல்வி கொடுக்கப்பட வேண்டும். கல்வியின் மூலம் சிந்திக்கும் ஆற்றலைப் பெண்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதை உறுதிசெய்வதில், ஒரு சமுதாயத்தின் பெரும்பங்கு ஊடகங்களிடமே இருக்கிறது என்பதை இவர்கள் புரிய மறுப்பதேன்?

பெண்களில் ஏற்படுகின்ற முன்னேற்றமே சமுதாய முன்னேற்றம். பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் 10 மாதம் தாயின் கருவறையில் இருந்து பெறுகின்ற உணர்வே அந்தப் பிள்ளையின் உணர்வு. குழந்தை வளர்ப்பிலும் பெண்களே அதிகம் ஈடுபடுவதால் முன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியர்களாக பெண்களே கடமையாற்றுவதாலும் தமிழ் சமுதாய எதிர்கால நலன் கருதி பெண்களுக்கான சரியான வழிகாட்டல்கள் குடாநாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இது இவ்வாறு இருக்க, குடாநாட்டின் கல்வித் தரம் குறைந்து போயுள்ளமையை ஆராய்வதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றுள்ளார்கள். குடாநாட்டு பெண்களை அழகுபடுத்த எண்ணுபவர்கள், பெண்களை கல்வியில் மேம்படுத்த வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரலாமே? இவர்கள் தங்களது பெண் பிள்ளைகளை இதே வழியில் செல்ல அனுமதிப்பார்களா?

சுய லாபங்களுக்காக தன்இனத்தையோ, சுற்றத்தையோ ஏமாற்ற நினைப்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவன் மட்டும் தான் தேசத்துரோகி அல்ல, மக்களின் பலவீனங்களைப் பணமாக்க முயல்பவனும் தேசத்துரோகிதான் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

பணம் யாரும் உழைக்கலாம், ஆனால் நுகர்வோன் (குறிப்பாக சிந்தனையில் வறுமைப்பட்டவன்) ஏமாற்றப்படக் கூடாது. எந்த நிறுவனத்திற்கும் தரநிர்ணயம் முக்கியம், இந்த தரநிர்ணயத்தை தமிழர்களை நிர்வகிப்பவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

வியாபார உலகில் தரநிர்ணயம் ஒன்றே மக்களை பாதிக்காமல் காப்பாற்றக்கூடியது. வியாபாரத்தில் பாதிப்படையும் மக்களைக் காப்பாற்ற நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் நேர்த்தியாக அமுல்படுத்தப்பட வேண்டும். பலவீனத்தைப் பணமாக்குவது முற்றாக நிறுத்தப்படுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும், ஆவன செய்யவேண்டும்.

அழகுப் பயிற்சி நிலையங்களின் வளர்ச்சி அழகுராணிப் போட்டிகள் என்று வளர்ந்து தமிழர்களின் ஆணிவேரிலேயே கைவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை எதற்காக இரத்தம் சிந்திப் போராடினார்களோ அந்தப் போரில் வெற்றி பெறும்போது நாம் எமக்கிருந்த அழியாத சொத்து, பண்பாடு, கலாச்சாரம், விழுமியங்களை இழந்து இரவல் பண்பாடு, கலாசாரங்களை வலிந்து எமக்குள் இணைத்துக் கொள்பவர்களாக இருந்து விட்டால், எமது போராட்டமே அர்த்தமற்றதாகி விடுமல்லவா? குறுகிய ஆயுள் உடைய நிரந்தரமற்ற வாழ்வில், சந்தோஷமான சமூக வாழ்வே மனித வாழ்க்கை. இதனை நன்கு ஆராய்ந்து அறிந்து உருவாக்கப்பட்டது தமிழர்களின் பண்பாடும், கலாசாரமும்.

ஒளிமயமான சமூகவாழ்வை நோக்கி வெற்றி வேங்கைகளாகப் பயணிக்கும் எம் புரட்சித்தமிழ்;ப் பெண்களின் உள்ளங்களைச் சிதைக்கும் கலாச்சாரச் சீரழிவிற்கான மூலவேர்களை இனம்கண்டு அப்புறப்படுத்த தமிழ் ஊடகங்கள் விரைந்து செயற்படுமா ...........?

(கலாசார பண்பாட்டுச் சின்னங்கள் அணிவது கலாசாரம், பண்பாடு ஆகிவிடாது. நாம் வாழும் சமூகத்தோடு சேர்ந்து உடைகள், சின்னங்கள் மாறினாலும், சிந்திப்பதும் செயற்படுவதும் தமிழர்களாக இருக்க வேண்டும்).

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

எழுபதிலும் ஆசை வரும்!

-யாழிலிருந்து குரு[நன்றி: தமிழ்நாதம்]-

யாழ் மாநகரத்திற்கு நீர் வழங்கும் நீர்வேலைப் பகுதியினருக்குரிய ஆலோசனை பொறியியலாளரின் அலுவலக அறை முற்றிலும் கழிவு எண்ணெய் (உபயோகிக்கப்பட்ட வாகன இயந்திர எண்ணெய்) ஊற்றப்பட்டு, வாகனத் திருத்துமிடத்திலும் பார்க்க மிகமோசமான நிலையில் இருந்தது. நல்லு}ர் மேற்குப்புற வீதியில், யாழ் மாநகர சபைக்குச் சொந்தமான கட்டிடத்தி;ல் அமைந்துள்ள இவ் அலுவலகம் முன்னர் மற்றய மாநகரசபை அலுவலங்களிலும் பார்க்க கவர்ச்சியாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து நடந்த சம்பவங்கள் முறையே:

1. நீர் வேலைப்பகுதியைச் சேர்ந்த எந்த ஊழியர்களும் வேலைக்காகக் கையெழுத்திட அனுமதிக்கப்படவில்லை. பொலிசார் விசாரணைக்கு வருவார்கள் அதனால் யாரும் கையெழுத்திட வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

2. இரண்டு நாட்கள் சென்ற பின் அனைத்து ஊழியர்களும் சம்பளம் இல்லாத விடுப்பில் சென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆலோசனைப் பொறியியலாளரின் தகாத நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாமல் ஊழியர்கள் மாநகர ஆணையாளருக்கு ஒரு கடிதத்தினை அனுப்பிய அதேவேளை மக்களுக்கான துண்டுப்பிரசுரம் ஒன்றையும் தயாரித்தார்கள் (பிரதிகளைப் படித்துப் பார்க்கலாம், அவற்றில் ஒன்று தனியார் கணினி நிறுவனம் ஒன்றின் மூலம் தயாரிக்கப்பட்டது. மற்றையது கைகளினால் எழுதப்பட்டது. கைகளினால் எழுதிய பிரதியில் உள்ள எழுத்துப்பிழைகள் ஊழியர்கள் பாடசாலைக் கல்வியில் தேர்ச்சிபெறாத அப்பாவிகள் என்பதைத் தெளிவு படுத்ததுகின்றது.).

எனவே இந்த ஊழியர்கள் தான் அலுவலகத்தினுள் இடம்பெற்ற அசம்பாவிதங்களுக்குக் காரணம் என பொறியியலாளர் எண்ணுவதற்கு வழிவகுத்தது.

பொதுவாக மக்கள் தங்கள் அனுபவ, அறிவியல் நிலைகளுக்கு ஏற்ப தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிர்ப்புகளை வெளிப்படுத்துவது வழமையே. அதாவது அமெரிக்காவிற்கு ஒரு நாட்டைப் பிடிக்காவிட்டால் அந்நாட்டிற்கு எதிராகப் பொருளாதாரத் தடையை அமுல்படுத்தலாம் அல்லது போர் தொடுக்கலாம் அல்லது அணுக்குண்டை வீசலாம். அல்கைதா அமைப்பினர் தன்னுடைய ஆற்றலுக்கும் அனுபவத்திற்கும் மனித வெடிகுண்டுகளை விமானத்தில், கார்களில் அனுப்பி தனது எதிரிகளையும் அதற்கு சார்பானவர்களையும் அழிக்க முயற்சித்தார்கள். அதே போலவே யாழ் மாநகரசபையில் நீர்வேலைப்பகுதியில் பொருத்துதல், பராமரிப்பு போன்ற பகுதிகளில் பணி புரியும் தொழிலாளர்கள் தங்களின் சக்திக்கு ஏற்றவகையில் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கக்கூடும்.

எந்த ஊழியர் இப்படி அலுவலகத்தை அசுத்தப்படுத்தினார் என்பதை அறியமுடியாத பொறியியலாளர் அனைத்து ஊழியரையும் தண்டிக்க எடுத்த முடிவே, அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமளவிற்கு நிலைமையைக் கொண்டு சென்றது. அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு உத்தேசித்த வகையில் அலுவலகத்தை அசுத்தப்படுத்தியது தனிப்பட்ட குரோதங்களுக்காக இல்லை என்பதும் வெளிப்படையாகவே தெரிகின்றது.


என்ன காரணத்திற்காக நீங்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கப் போகின்றீர்கள் என வினவியபோது ஊழியர்களால் ஆணையாளருக்குக் கொடுக்கப்பட்ட கடிதமும், மக்களுக்காக எழுத்தப்பட்ட அறிவித்தலும் எமக்குத் தரப்பட்டது.

அவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளைப்பற்றி பலரிடமிருந்தும் அறிந்தோம். ஊழியர்களால் கூறப்பட்ட உண்மைகளிலும் பார்;க்க அதிக உண்மைகள் இன்னும் வெளியுலகிற்கு தெரியாமல் இருப்பது எமக்குத் தெரியவந்தது. அவற்றை தழிழ்நாதம் வாசகர்களுக்காக தருகின்றோம்.

பொறியியலாளர் என்று அழைக்கப்படும் நபர் இலங்கை கட்டுபத்தை தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்பம் சம்பந்தமான சான்றிதழ் கற்கைநெறியை பூர்த்தி செய்து யாழ் மாநகரசபையில் மின்சாரப்பகுதியில் வேலையில் அமர்த்தப்பட்டார் என அறிய வருகின்றது. இந்தக் கற்கைநெறியை முழுமையாகப் பூர்த்தி செய்து சித்தி பெற்றவரா என்பதை அறிய முயற்சித்த போதும் பலத்த சந்தேகங்களே கிளப்பப்பட்டது.

மேலும் 1981ம் ஆண்டளவில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களால் அமைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபையால் கொள்முதல் செய்யப்பட்ட யாழ்ப்பாணத்திற்குரிய இலட்சக்கணக்கான மின்மானிகள் தரமற்றவை என தகுதிவாய்ந்த பொறியியலாளரால் சான்றிதழ் அளித்த பின்னும் அனைத்து மின்மானிகளும் தரமானவை என உத்தரவாதம் அளித்து மாநகரசபைக்குள் உள்வாங்கியது முதல் ஊழல் ஆரம்பிக்கப்பட்டதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்தகைய பாரிய ஊழலில் சம்பந்தப்பட்டவர்களின் ஆசீர்வாதங்களோடு தொடர்ந்தும் ஊழல்கள் செய்வதற்கான வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டதாக மேலும் தெரியவருகிறது.

1991ம் ஆண்டளவில் சேவை மூப்படைந்த பின்னர் ஓய்வு பெறவேண்டியவர் யாழ்ப்பாணத்தில் மின்சாரமே இல்லாத காலத்திலும் தொடர்ந்து ஐந்து வருடங்களாக மின்சாரப்பகுதிக்கு பொறுப்பான பொறியியலாளராக கடமை ஆற்றினார். இதற்கு இவருடன் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டவரும், அப்போதைய மாநகரசபை ஆணையாளரும் ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரியவருகின்றது.


அதனைத்தொடர்ந்து ஜேர்மன் நாட்டு தொழில்நுட்பம் சார்ந்த உதவிவழங்கும் அரசசார்பற்ற நிறுவனமான ஜி.ரி.சற் (GTZ) இல் யாழ். மாநகரப்பகுதியில் அமைக்கப்பட்டுவந்த புதிய நீர்விநியோக சேவைத்திட்டங்களுக்குப் பொறுப்பான அதிகாரியாக பல வருடங்களாக கடமையாற்றினார். நல்லு}ர் இந்துவிடுதியில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான கட்டிடத்திலேயே இவரது ஜி.ரி.சற். இணைப்பு அலுவலகமும் இருந்தது.

இவற்றில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில் சாதாரண தொழில்நுட்ப சான்றிதழ் (மின்சாரப்பகுதியில்) பெற்ற ஒருவர் எவ்வாறு சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றில் நீர்வடிகால் சம்பந்தமான வேலைத்திட்டத்திற்கு ஆலோசனைப் பொறியியலாளராக சிபாரிசுசெய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்பட்டார்? அவ்வாறு பணியில் அமர்த்த காரணமாக இருந்த நபரின் உள்நோக்கம் என்ன? என்பதே.

சர்வதேச தொண்டு நிறுவனத்தில் எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவிற்கு சுரண்டப்பட்டது. அவ்வாறு சுரண்டப்பட்ட பொருட்களும், பணமும் தன்னுடைய காரியங்களுக்காகவும், மற்றவர்களையும் தனது தகாத செயல்களுக்குப் பாவிப்பதற்கான லஞ்சம் உட்பட மேலதிக ஊக்கத்தினைக் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக சம்பந்தப்பட்ட பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர். (தற்போது உதவி செய்து வந்த ஜி.ரி.சற். நிறுவனம் தன்னுடைய பணிகளைப் பூர்த்தி செய்து திரும்பி விட்டதாகக் கூறப்படுகின்றது.)

புதிய நீர் விநியோகத் திட்டங்களை அமைப்பதற்கு என ஜி.ரி.சற். இனால் வழங்கப்பட்ட உதிரிப் பாகங்களையும், பொருத்து வேலைக்கான கருவிகள் மற்றும் பொருட்களையும் இவர் தனிப்பட்ட முறையில் ஒழித்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இவர் தனக்கென ஒரு இரகசிய களஞ்சியத்தைப் பேணியதன் மூலம் தொடர்ந்தும் அப்பொருட்கள் உரிய காலப்பகுதியில் உரிய சேவைக்கு பயன்படாமல் தவிர்த்து வந்துள்ளமை புலனாகின்றது.

மாநகரபையில் பணிபுரியும் தொழில்நுட்ப சேவையைச் சேர்ந்த தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத அதிகாரி ஒருவர் தகவல் தருகையில் மேற்படி நபர் பொருட்களின் ஒரு பகுதியை மட்டும் மாநகர நீர்விநியோக புதிய வேலைத் திட்டங்களுக்குக் கொடுத்துவிட்டு மிகுதியை மேற்படி இரகசிய களஞ்சியத்தில் இருந்து பகுதி பகுதியாக கையாடல் செய்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது அந்த இரகசிய களஞ்சியத்தில் எஞ்சியுள்ள பொருட்களை யாரிடம் கையளிப்பது என்று தெரியாமல் மேற்படி நபர் பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அறியவருகின்றது. அரசாங்கக் கணக்காய்வாளர்கள் (ஓடிட்டர்கள்) மேற்படி நபரது அலுவலகம் சார்ந்த, களஞ்சியம் சார்ந்த எண்பாPட்சிப்பு, பொருட்பாPட்சிப்பு என்பனவற்றை மேற்கொள்ள சில ஆண்டுகளுக்கு முன்பு முயன்றபோது அது பல்வேறு சாக்குப்போக்கு சொல்லி சமாளிக்கப்பட்டு தவிர்க்கப்பட்டதாகவும் தெரிகின்றது. இதற்காக இந்த அரச கணக்காய்வாளர்கள் இவரிடமிருந்து லஞ்சமாகப் பணத்தையும் பொருட்களையும் பெற்றிருக்கலாமென்ற கருத்தும் நிலவுகிறது.

இவை எல்லாம் ஒருபுறமிருக்க தற்போது 70 வயதை அடையும், சேவையடிப்படையில் பொறியியலாளராக தரமுயர்த்தப்பட்ட மேற்படி நபர் யாழ் மாநகரசபையில் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரப்பகுதியில் கடமையாற்றி சேவை நீடிப்பையும் அனுபவித்து ஓய்வு பெற்றபின் ஓய்வுதிய வருமானத்தையும் பெற்றுக்கொண்டு ஜி.ரி.சற்.இல் கொழுத்த சம்பளத்துடன் பணியாற்றினார். தற்போது மீண்டும் மாநகரசபை நீர்வழங்கற் பிரிவுக்கும் பொதுச்சுகாதார பொறியியல் பிரிவுக்கும் ஆலோசனைப் பொறியியலாளராக வடக்கு கிழக்கு மாகாணசபையால் கவர்ச்சிகரமான கொடுப்பனவுடன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய நியமனத்திற்குக் காரணம் தற்போதைய மாநகரசபை ஆணையாளரும், வடகிழக்கு மாகாணசபையில் முக்கிய பதவி ஒன்றில் அங்கம் வகிக்கும் முன்னைநாள் ஊழல் கூட்டாளியுமே என்றும் தெரியவந்துள்ளது.

ஊழியர்களின் கடிதத்திற்கு பதிலளித்த மாநகரசபை ஆணையாளர்,

உங்கள் எவருக்கும் பொறியியலாளரைப்பற்றி கதைப்பதற்கு அதிகாரமில்லை. உங்களுக்கு அவரின் கீழ் வேலை செய்ய விருப்பமில்லாவிடில் நீங்கள் வேலையை விட்டு நீங்கலாம். இருப்பினும் இன்று உங்களுக்கு சம்பளத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நீங்கள் எல்லோரும் வேலைக்கு போகலாம், அத்தோடு உங்கள் கடிதத்திற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி இந்த ஊழியர்களின் போராட்டம் மிகத்தந்திரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாணசபை திருமலையில் கடமையாற்றும் இரண்டு அதிகாரிகளைத்தவிர, மற்றவர்களில் 60 தொடக்கம் 70 வரையான ஊழியர்கள் ஓய்வுபெற்றபின் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டவர்களாவர். வடகிழக்கு மாகாணசபை ஆளுநர் ஒரு ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, அரசின் நிரந்தர ஓய்வூதியம் கிடைப்பது வழமை. அப்படியிருந்தும், ஏன் இந்த வயோதிபர்கள் எல்லோரும் மீண்டும் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும்?

எத்தனையோ தமிழ் இளைஞர்கள் யுவதிகள் வேலையற்று இருக்கும் போது அவர்களை வேலைக்கு அமர்த்தாது தொடர்ந்தும் தொடர்ந்தும் வயோதிபர்களை வேலைக்கு அமர்த்தும் அரசின் உள்நோக்கம் என்ன?

இனம்காணப்பட்ட பல ஊழல் பேர்வழிகள் தொடர்ந்தும் பதவியுயர்வுகள் பெற்று முன்மாதிரிகளாக திகழ்வதன் நோக்கம் தமிழர்களின் எதிர்கால சந்ததியினரையும் சுயலாபமீட்டும், நேர்மையற்றவர்களை உருவாக்கவா?

வடக்கு கிழக்கு மாகாணங்கள் போரினால் அழிந்து கொண்டிருப்பதை மேலும் அதிகரிக்கும் வகையில் ஆற்றலில்லாத அதிகாரிகளைத் திட்டமிட்டே ஆசனத்தில் அமர்த்தி மேலும் அழிவுக்கு உள்ளாக்கவா? தரப்படுத்தல் மூலம் கல்வியில் தமிழர்கள் முன்னேறிவிடாது தடுக்கும் இனவாத அரசின் முயற்சிகள் 58லிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் இன்னுமொரு அம்சமாக, செயலாற்ற முடியாத பல வயோதிபர்கள் தொடர்ந்தும் பதவிநீடிப்புப் பெற்று முக்கிய பதவிகளில் இருக்க அனுமதிக்கப்படுவது. இதன்மூலம் இளைய தலைமுறையினர் தொழில்வாய்ப்பைப் பெற்று முன்னேறாது தடுப்பது.

காலகாலமாக இனவாத அரசுகளின் இச்சதி முயற்சிகளை முறியடிக்க தமிழ் மக்கள் முன்வரவேண்டும். முன்வந்து செய்யவேண்டிய முக்கிய பணியொன்று காத்துக் கிடக்கிறது. தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தியில் தங்களை அறிந்தோ அல்லது அறியாமலோ முட்டுக்கட்டையாக இருக்கும் பதவிகளில் உள்ள வயோதிபர்கள் தமிழ் பிரதேசங்களின் நலன் கருதி தங்கள் பணிகளையும் பதவிகளையும் இராஜினாமா செய்து, தங்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பார்களா? இதன்மூலம் தங்கள் அடுத்த தலைமுறையின் ஈடேற்றத்திற்கு உதவுவதுடன், இனவாத அரசிற்கு மறைமுகமாக உதவுவதை நிறுத்துவார்களா?

தமிழ் மக்களிடம் இடைக்கால நிர்வாகத்தைக் கொடுத்து, இதே அதிகாரிகளைத் தொடர்ந்தும் பணியில் இருத்தி வடகிழக்கின் புனர்நிர்மாணம், புனர்வாழ்வு, அபிவிருத்தி என்பனவற்றை ஊழல்படுத்தி குழப்பியடித்து தமிழரின் அரசியல் தலைமைக்கு மக்களுடாக நெருக்கடியை, அவப்பெயரை ஏற்படுத்தும் அரசின் சதிகார முயற்சிக்கும் தீய நோக்கத்திற்கும் எமது அனுபவமிக்க முன்னோடிச் சமுதாயமே வழிகோலலாமா? நாம் தினமும் மதித்து வழிபடும் எம் அன்பான முதிய தலைமுறையினரே, உங்கள் எதிர்காலக் குழந்தைகளின் நன்மைக்காக, எப்போது நீங்கள் உங்கள் தீர்மானங்களைச் சீர்தூக்கி நேராக்கப் போகிறீர்கள்? தமிழினத்தை அறிவிலிகளாக்க அரசு திட்டமிட்டுக் களமமைக்கும் அத்திவாரத்தின்மேல், நீங்கள் கட்டடம் கட்டுவது நியாயந்தானா? எம்மைப் பெற்ற எமது முதியவர்கள் தங்களைத் தாங்களே நிறுத்துப் பார்த்து, நியாயம் தருவார்களா?

எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காகத் தயாராக வேண்டும் தமிழர் தரப்பு! நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை உயிர்வாழும் போதே காணத்துடிக்கும் தமிழ் வயோதிபர்கள் ஆயிரம் ஆயிரம்! அவர்கள் ஒன்றிணைந்து, இதற்கு எதிராகப் பயணிக்கும் ஒரு சில சுயநல முதியவர்களை நேர்பாதையில் பயணிக்க வழியமைத்துக் கொடுப்பார்கள் என்று நம்புவோமாக!

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (திருக்குறள் 11:2)

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

நெஞ்சின் உள்ளே!

இந்தப் பகுதி உறவுகளை உண்மையைப்பற்றி சிந்திக்கவைக்கும் பகுதி உங்கள் உணர்வுகளை உறுத்திய பல விடயங்களை உள்ளுக்குள் வைத்து குடைந்து கொண்டிருக்காமல் குமுறிவரும் எண்ணங்களை உடனே எமக்கு அனுப்பிவையுங்கள். நாம் எவர்க்கும் பணியோம்.நாம் எவர்க்கும் வால் பிடிக்கவும் செய்யோம்.நடுநிலையில் நின்று உண்மைக்காக குரல்கொடுப்போம.எனவே உங்கள் உங்கள் பகுதிகளில்(உலகின் எந்த முடுக்காக இருந்தாலும் பரவாயில்லை)உங்களுடைய உள் மனதை உறுத்தியவற்றை உண்மையாக அனுப்புங்கள்.உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகளுடன் வருமாயின் அதுவே சிறந்தது.நாங்கள்தயார்?நீங்கள்?

அனுப்பியவர் வெப்தமிழன்

1 கருத்துக்கள்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]