எந்த பிசாசுடனும் சேர முடிவு செய்துவிட்ட ஆனந்தசங்கரி
-புதினம்.கொம்-
பொங்குதமிழ் நிகழ்வுகளை குழப்புமுகமாக சிங்கள இனவாதிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்க்க முண்டியடிக்கும் தமிழின விரோதிகள்
ரொறன்ரோவில் இடம்பெறும் பொங்குதமிழ் நிகழ்;வைக் குறிவைத்து எழுதப்பட்ட ஆனந்தசங்கரியின் கடிதமொன்றை தாய்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் 'ஏசியன் ரிபூன்" இணையத்தளம் பிரசுரித்துள்ளது. இது விடுதலைப் புலிகளின் ஒரு செயற்பாடே என்றும், இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் ஆனந்தசங்கரி கனடிய அரசிற்கும் அதிகாரிகளுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கனடிய அரசு பேச்சுவார்த்தையில் காத்திரமான பங்குவகிக்க வேண்டுமெனவும், இடைக்கால தன்னாட்சி அதிகார சபையின் அடிப்படையில் பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் கோரியே பொங்குதமிழ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மையாக இருந்த போதும் அதனை திசை திருப்பச் செய்யுமுகமாகன சாரப்படவே மேற்படி கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பொங்கு தமிழ் என்ற போர்வையில் தமிழ் மக்களது உணர்வுகளை தட்டி எழுப்பி அமைதி முறையில் இனச்சிக்கலுக்கு தீர்வு காணும் முயற்சியை மழுங்கடிப்பதே அதன் உண்மையான நோக்கம் என்றும் அந்தக் கடிதத்தில் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தனிப்பட்ட செலவொன்;றினை மேற்கொண்டு கனடாவில் தங்கியிருக்கும் ஆனந்தசங்கரி கனடியத் தமிழர்கள் குறித்த தலையீட்டை சிறீலங்கா சார்புத் தமிழ்க்குழுக்களின் உதவியுடன் மேற்கொண்டுள்ளார் என்றே நம்பப்படுகிறது. கனடியப் பொலிஸ்மா அதிபர், ரொறன்ரோ நகர மேயர், கனடியத் தூதுவர், மாகாண அரசு ஆகியோருக்கு எழுதப்பட்ட இக் கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக மேற்படி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளதுடன், அக் கடிதத்தையும் பிரசுரித்துள்ளது.
பொங்குதமிழ் நிகழ்வுகளை குழப்புமுகமாக சிங்கள இனவாதிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களுக்கு வலுச்சேர்க்குமுகமாக எழுதப்பட்ட இக் கடிதத்தை ~கரிசனையுள்ள சில தமிழர்கள்| தன்னுடன் கதைத்ததன் அடிப்படையில் தான் எழுதுவதாகவும், அவர்களின் பெயர் விபரங்களை அவர்களின் பாதுகாப்புக் கருதி தன்னால் தர முடியாதெனவும் ஒரு புனைகதையொன்றை புகுத்தியே வரையப்பட்டுள்ளதோடு ஊர் பேர் இல்லாத மொட்டைக் கடிதமொன்றும் மேற்படி கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஈ.பி.டி.பி.யின் தலைமையால் திட்டமிட்டு கொல்லப்பட்டவர் என ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட சின்னபாலாவின் பெயரால் ஈ.பி.டி.பியினர் கனடாவில் நடத்திய கண்டனக் கூட்டத்திலும் ஆனந்தசங்கரி கலந்து கொண்டுள்ளதாக அவர்களின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரான தனக்கு விடுதலைப்புலிகளின் பயங்கரமான நடவடிக்கைகள் பற்றிப் பூரணமாகத் தெரியும் என்றும் தெரிவித்ததோடு இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மேற்படி இணையத்தளம் தெரிவித்துள்ளது.
தமிழர் கூட்டணியின் தலைவர் நான்தான் என்று ஆனந்தசங்கரி தன்னைத்தானே தட்டிக் கொடுத்தாலும் மக்களால் தூக்கியெறியப்பட்டு அரசியலில் அனாதையாகிவிட்ட அவர் தனது தனிப்பட்ட வாழ்விற்காக எந்த பிசாசுடனும் சேர அவர் முடிவு செய்துவிட்டதையே அவரது அண்மைக்காலப் போக்கு சுட்டிக் காட்டுகிறது.







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு