www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

நிஜங்களின் அம்பலம்

அன்புடன் பீபீசி தமிழ்ச்சேவையினருக்கு !

-மூலம்:சூரியன்.கொம்-
சர்வதேசக்கடற்பரப்பில் நின்று கொண்டு தர்மநாயகம் கமலன் ஆகிய நான் தங்களுக்கு எழுதும் கடிதத்திற்குச் செல்ல முன்னர் என்னைப்பற்றிய ஒரு அறிமுகத்தைத் தந்துவிட்டு எனது கடிதத்துக்கு வரலாம் என எண்ணுகிறேன்.
நான் ஒரு விடுதலைப் போராளி விடுதலைப்புலிகளின் வணிகக்கப்பல் ஒன்றில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறேன். குருநகர் சம்பவத்தில் காயமடைந்த தர்மநாயகம் அமலனின் சகோதரன் நான். தற்போது எனது சகோதரன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் எனது தாயாரின் பராமரிப்பில் இருக்கின்றார்.

எனது சகோதரனுக்கு நடந்த சம்பவம் தொடர்பாகவும் , அச்சம்பவத்தை பீபீசி தமிழ்ச்சேவை எவ்வாறு பூதாகாரமாக்கி செய்தி வெளியிட்டுள்ளது என்பதனையும் எனது தாயார் TELEX ஊடாக அறியத்தந்திருந்த செய்தியை அறிந்த போது நான் மிகுந்த வேதனையடைந்தேன். இது தொடர்பாக எனது கருத்தினை பீபீசி தமிழ்ச்சேவைக்கு அறியத்தரவே இக்கடிதத்தினை வரைகின்றேன்.

யாழ்குருநகர் சம்பவத்தை அரசியலாக்கி சுயலாபம் தேடும் தேசத்துரோகிகளுக்கும் , அப்பிரச்சனையை ஒரு பிரதேசவாதமாக்கி மக்களிடையேயான மோதலை உண்டு பண்ணும் வகையில் பீபீசி தமிழ்ச்சேவை தனது செய்தியில் அப்பிரச்சனையை பூதாகாரமாக்கி செய்தி வெளியிடுவது எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. எனது சகோதரனுக்கு நடந்த சம்பவத்தை அரசியலாக்கி துரோகிகளும் , அவர்களின் பின்னிற்கும் இன்னொரு சக்தியின் தலையீடும் ஒரு பிரதேசவாதத்தை ஊக்குவிப்பது போலவே பீபீசி தமிழ்ச்சேவையின் செய்தி அமைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன்.

பீபீசியின் செய்தியாளரான நிமல்ராஜனைக் கொலைசெய்தவர் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியுள்ளார். இது தொடர்பாகவோ அல்லது நேற்று அம்பலவன் பொக்கணையில் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டது தொடர்;பாகவோ செய்திவெளியிடவோ அல்லது இச்செயல்களைக் கண்டிக்கவோ முன்வராது எனது சகோதரனுக்கு நடந்த சம்பவத்தை பெரிதாக்கி ஊதுவது ஏன் ?

08.03.1996ம் ஆண்டு வலைப்பாடு கடற்பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டிருந்த எனது தந்தையார் தர்மநாயகம் , எனது சகோதரன் விமலன் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட போது தந்தையையும் , சகோதரனையும் எனது குடும்பம் இழந்து நின்ற போது பீபீசி தனது செய்தியில் எதைப்பெரிதாய் செய்தது ? அப்போது யாழ்குடாவைக் கைப்பற்றிவிட்டதாய் மார்தட்டிக் கொண்டிருந்த சிறீலங்கா இராணுவத்தின் நடவடிக்கையை சாதனையாகக் கருதி செய்தி வெளியிடும் ஆர்வத்தில் இந்தச் சம்பவத்தை உங்கள் வானொலி மறந்து போயிருந்ததா ? அல்லது அன்றைய எமது இழப்பு உங்களுக்கு இழப்பாகத் தெரியவில்லையா ?

தற்போது குருநகர் சம்பவத்தைப் பெரிதாக்கி குழப்பத்தை உருவாக்கும் வகையில் செய்தி வெளியிடுவதை எனது குடும்பமோ நானோ அனுமதிக்கமாட்டோம். எவ்வளவோ விடயங்கள் , எவ்வளவோ துயர்கள் எங்கள் மக்களின் பிரச்சனையாக இருக்கின்ற போது அந்தச்செய்திகள் எதனையும் உங்கள் ஊடகம் செய்தியாக்கத் தவறிவிட்டு அண்மைய நாட்களில் குருநகர் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி செய்தி கொடுப்பது கருணாவின் பிரதேசவாதத்துக்கு துணைபோனது போல இன்னொரு பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் செயலாகவே இச்செயல் அமைவதாகவே நான் கருதுகிறேன்.

தொடர்ந்தும் இத்தகைய செய்திகளை வெளியிடுவதைத் தவிர்த்து உங்கள் நடுநிலமையான ஊடகதர்மத்தை நிலைநாட்டுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

இக்கடிதத்தைத் தங்கள் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம் உண்மையுள்ள,
தர்மநாயகம் கமலன்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]