|
அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் காலமானார்
[Puthinam] [13.12.2006] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம், லண்டனின் இன்று வியாழக்கிழமை காலமானார்.35 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு நோயால் பாதிப்புற்றிருந்த இவர், 90களின் பிற்பகுதியில் சிறுநீரக மாற்றீடு செய்துகொண்டார். இவருக்கு புற்றுநோய் பரவியிருந்தமை, அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த இவர், தனது 68வது வயதில், காலமானார். இவரது உயிர்பிரியும் வேளை, இவரது பாரியார் அடேல் பாலசிங்கம் உடனிருந்தார். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நேரடி ஈடுபாடு கொண்டிருந்த பாலசிங்கம் அவர்கள், 1985ம் ஆண்டு முதல் பல்வேறு பேச்சுவார்த்தைகளிலும் நேரடியாகப் பங்கெடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி. கோபிகா இணையும் 'யாழ்ப்பாணம்'
- 26.10.2006- ஆகவே சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இயக்குனர் சுந்தர் சி. மீண்டும் மேக்கப் போடுகிறார்! 'ரெண்டு' படத்தில் பிஸியாக இருப்பவர் கிடைக்கிற 'கேப்'பில் இளங்கண்ணனுடன் டிஸ்கஷனில் இறங்கிவிடுகிறார். இளங்கண்ணன்? அர்ஜூன் நடித்த 'ஒற்றன்' படத்தை இயக்கியவர். சுந்தர் சி. நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போகிறவர்.'தலைநகரம்' படத்தின் விநியோக உரிமையை வாங்கிய ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை தயாரிக்கிறார். 'தலைநகரம்' படத்திற்கு கதாநாயகியை தேடோ தேடென்று தேடி கடைசியில் குஷ்புவின் ரெகமன்டேஷனில் சுந்தர் சி.க்கு ஜோடியானார் ஜோதிர்மயி. இந்த முறை சுந்தர் சி.யுடன் சேர்ந்து நடிக்கப் போகிறவர் கோபிகா! >>>>
அமெரிக்காவை ஆட்டிவைக்கும் கிரிக்கெட் மோகம்
பொதுவாகவே ஆங்கிலேயர்கள் ஆண்ட நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டு பிரபலமாக இருக்கும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள். அமெரிக்காவும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுதான். அங்கும் முதலில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன் போர் செய்ததால் கிரிக்கெட் விளையாடுவது அடிமைத்தனத்தைக் குறிக்கும் என்று நினைத்து அமெரிக்கர்கள் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்துள்ளனர் >>>>
திரையில் சிவராசன், சுபாவின் இறுதிநாட்கள்
- பிபிசி தமிழ்- இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக கருதப்படுவோரின் இறுதி நாட்கள் குறித்து திரைப்படம்தமிழகத்தின் திருப்பெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த போது ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார்முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையாளிகளாக கருதப்படும் சிவராசன், சுபா மற்றும் அவர்களது சகாக்களின் இறுதி நாட்களை சித்தரிக்கும் சயனைட் எனும் புதிய தமிழ்த் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
பாடல்கள், மரத்தைச் சுற்றும் காதலர்கள், ஒரேயடியில் பலரை அடித்து வீழ்த்தும் கதாநாயகன், பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் இவையெல்லாம் இல்லாமலேயே ஒரு திரைப்படத்தை துணிச்சலாக தயாரித்து வெளியிடுகிறார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இயக்குநர் ரமேஷ். முதலில் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டது சயனைட். மேலும்
சம்பூர் பொறிக்குள் அகப்பட்டுவிட்ட அனுசரணையாளர்கள்
[Puthinam] [லண்டனிலிருந்து சி.இதயச்சந்திரன்] திருகோணமலை சம்பூர் தொடர்பிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திர யுத்தப் பொறிக்குள் அகப்பட்டுக் கொண்டு ஒரு இறுதி நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு நோர்வே அனுசரணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.மக்களின் மனநிலையும் ஊடகங்களும்
சம்பூர் நிலவரம் குறித்து தமிழ் மக்கள் அதிக கவலையடைவார்கள். எப்போதும் வெற்றிச் செய்திகளை எதிர்பார்ப்போர் உண்மை நிலவரத்தின் தாற்பரியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.விடுதலைப் புலிகள் தமது அரசியல், இராணுவத் தந்திரோபாயங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது, போராட்டத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.மண்டைதீவில் அழிப்புச் சமரினைத் தொடுக்கும் போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதும்->>>>>>
யாழில் தொடர்கிறது கடும் மோதல்
[Puthinam] [ச.விமலராஜா] சிறிலங்கா இராணுவத்தின் வலிந்த தாக்குதலுக்கு எதிராக இராணுவ முன்னரண் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் செறிவான தாக்குதலை நடத்தி படைத்தரப்புக்கு இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.கிளாலி முதல் முகமாலை வரையான முன்னரண் பகுதிகளில் இந்த தாக்குதல் நேற்று பிற்பகல் 3 மணிமுதல் இன்று அதிகாலை 1.30 மணிவரை நீடித்தது. >>>>>
ஆற்று நீருக்கான சிறிலங்காவின் போர்ப் பிரகடனம்...
- பண்டார வன்னியன் :Sankathi.com- திருகோணமலை மாவட்டத்தினதும் மட்டக்களப்பு மாவட்டத்தினதும் எல்லையோரத்தில் மகாவலியாற்றின் கிளையாக வெருகல் பகுதியினுடாக சேருவெல நோக்கிச் செல்லும் மாவிலியாறு தமிழ் மக்களால் 20-07-2006 அன்று மறிக்கப்பட்டது. தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலை தனது இராணுவ இயந்திரம் மூலம் வேரோடு பிடுங்கி எறிந்துää >>>>>>>>
மாவிலாறு விவகாரத்தின் உண்மையான பின்னணி!
-Webeelam.com- திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மோதல்களுக்கு காரணமாக மாவிலாறு அணை விவகாரத்தை சிறிலங்கா அரசு கூறுகிறது. இலட்சக் கணக்கான தமிழ் மக்களின் விவசாய நிலங்களை அபகரித்தும் பல குளங்களை அழித்தும் நாசம் செய்த சிறிலங்கா அரசு மாவிலாற்றின் அணை மூடப்பட்டதற்காக போர் தொடுத்துள்ளது. இந்த அணை மூடப்பட்டதால் பாதிக்கப்படும் சில ஆயிரம் விவசாயிகள் சிங்களவர்களாக இருப்பதே சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது போர் தொடுத்துள்ளதற்கு காரணம் ஆகும். ஆனால் தமிழ் மக்கள் எதற்காக மாவிலாற்றின் அணையை மூடினார்கள்?>>>.
2006 பிபா கால்ப்பந்தாட்ட உலக்கிண்ணம் இத்தாலியின் கைகளில்.
-Unnmai.com- ஜெர்மனியில் இடம்பெற்ற 2006 பிபா கால்ப்பந்தாட்ட உலக்கிண்ணப்போட்டிகளில் இத்தாலி அணி வெற்றிபெற்றுää உலகக்கோப்பையினையும்ää உலக சம்பியன் என்ற பட்டத்தையும் தனதாக்கிக்கொண்டுள்ளது. ஜெர்மனியின் பேர்ளின் நகரில் ஜூலை 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரபரப்பாக இடம்பெற்ற பிரான்ஸ் மற்றும் இத்தாலி அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டிகளிலேயே இத்தாலி இந்த வெற்றியினைப்பெற்றுள்ளது. இதன்மூலம் உலகக்கிண்ண காற்பந்தாட்டப்போட்டிகளில் நான்காவது தடவையாக உலக சம்பியனாக இத்தாலி அணி பரிணமித்துள்ளது.>>>>>
நரசிம்ஹன் ராம் யாருடைய குரல்?
இலங்கைத் தமிழர்களுக்காகப் பரிந்துபேச தமிழகத்தில் வலுவான சக்திகள் இல்லை என்று கூறுவதன் மூலம் யாருக்கு தெம்பூட்டுகிறார்?பத்திரிகையாளன் என்ற நிலைக்கு அப்பால் இலங்கை விவகாரத்தில் இவர் அதீத ஈடுபாடு
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர் காமினி திசாநாயக்கவின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரிகளில் ஒன்றான "இந்து' வின் பிரதம ஆசிரியர் நரசிம்ஹன் ராம் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்."இந்தியாவும் இலங்கையும்; முன்னாலுள்ள எதிர்காலம்' என்ற தலைப்பில் ராம் ஆற்றிய ஒரு மணிநேர உரையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அவரைப் பற்றி எம்மை ஆழமாகச் சிந்திக்க வைத்தன.>>>>
உடன் செய்திகளுக்கு இங்கே செல்க
போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி -23-2002
-Nitharsanam- சிறிலங்கா ஜனநாயக் சோசலிஸ குடியரசு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் பெப்ரவரி -23-2002 முகவுரை சிறிலங்கா ஜனநாயக சோசலிஸ குடியரசு அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் ஒட்டுமொத்தமான நோக்கம் இலங்கையில் தற்போதுள்ள இன மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதாகும். இந்தத்தரப்பினர் (இந்த தரப்பினர் என்று இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடுவது சிறிலங்கா அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் ஆகும்) பகைமைகளுக்கு ஒரு முடிவுகட்டிää மோதலினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து குடிமக்களதும் வாழ்க்கை நிலைமையை சீருயர்த்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றனர். >>>>
தமிழீழ தேசியத்தலைவரின் மாவீரர்தின உரை 2005
பொறுமையிழந்து நம்பிக்கையிழந்து விரக்தியின் விளிம்பை அடைந்துள்ள எமது மக்கள் இனியும் பொறுத்துப் பொறுத்துக் காத்திருக்கத் தயாராக இல்லை. ஆகவே வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்தி செய்யும் வகையில் ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைப் புதிய அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இது எமது இறுதியான உறுதியான அவசர வேண்டுகோளாகும். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து கடும்போக்கைக் கடைப்பிடித்து காலத்தை இழுத்தடிக்கப் புதிய அரசாங்கம் முற்படுமானால் நாம் எமது மக்களுடன் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை எமது தாயகத்தில் தன்னாட்சியை நிறுவும் தேசச் சுதந்திரப் போராட்டத்;தை அடுத்த ஆண்டில் தீவிரப்படுத்துவோம்.>>>>
போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார்?:
தமிழகத்தில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை [புதினம்] இலங்கை போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறியது யார் என்ற தலைப்பில் தமிழகத்தில் செயற்பட்டு வரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் உத்தியோகபூர்வ வார ஏடான 'புரட்சி பெரியார் முழக்கம்' இல் ஆய்வுக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது அந்த இதழின் ஆசிரியரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான விடுதலை இராசேந்திரன் எழுதியுள்ள கட்டுரை விவரம்:>>>>
|