:: 24 நேர செய்திகள் :: Unable to open RSS Feed http://www.etamil24.com/indexwp.php?feed=rss with error HTTP ERROR: 404, exiting
:: யாழ் செய்திகள் தருவது வேம்படி.கொம் [Vembady.com] ::
|
கலாமை அசத்திய வவுனியா இறம்பைக்குளம் ம.வி. மாணவிக்கு கௌரவம்!
:
|
|
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பாராட்டைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த பிரயாகினி கணேஷலிங்கம் என்ற மாணவி, இந்திய குடியரசு தின நிகழ்வில் விசேட பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் அப்துல் கலாமிடம் கேள்வி கேட்டதுடன், அவர் அளித்த பதிலை அப்படியே மீண்டும் உடனேயே ஒப்புவித்து அவரது பாராட்டைப் பெற்றார் இந்த மாணவி.இந்தளவு திறமையுள்ள மாணவியை தான் எங்கும் பார்த்ததில்லை என்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய முன்னாள் [...]
|
|
யாழ். நகரில் போலி மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
:
|
|
யாழ். நகரப் பகுதியில் போலி மருத்துவர்கள் மருத்துவம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்துள்ளார்.யாழ். நகரில் மருத்துவ கிளினிக் நிலையங்களை நடத்துபர்களில் சிலர் போலி வைத்தியர்கள் எனவும் இவர்கள் மருத்துவம் செய்வது தொடர்பில் தகுந்த ஆதாரங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் போலி மருத்துவர்களைக் கைதுசெய்வதற்குரிய நடவடிக்கைகள் குறித்து யாழ். பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ரி.இந்திரனுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய [...]
|
|
யாழ். மாநகர சபை உறுப்பினர் பதவியை நிசாந்தன் இழந்தார்
:
|
|
யாழ். மாநகர சபையின் உறுப்பினரான சு.நிசாந்தன் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.அவர் உறுப்பினர் பதவி வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதன் காரணத்தால் அவர் சபை உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக யாழ். மாநகர சபையின் தெரிவத்தாட்சி அலுவலரினால் யாழ். மாநகரசபை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அனையடுத்து இன்று முதல் நிசாந்தன் சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிசாந்தன் ஈ.பி.டி.பி கட்சி சார்பில் மாநகர சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆயினும் அவர் அக்கட்சியின் கொள்கைக்கும் [...]
|
|
பருத்தித்துறையில் 17 வயது மாணவி கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை; வீட்டுக்கு அருகே சடலம் கண்டுபிடிப்பு
:
|
|
பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதர் மேரி டிலக்சனா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அல்வாய் வடக்கு றோ.க.த.க. வில் கல்வி பயிலும் இந்த மாணவியின் சடலம் நேற்று இரவு அவரது வீட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் [...]
|
:: தமிழ்வின் தள முன்னணி செய்திகள் ::
::இலண்டன் பிபிசி தமிழ் செய்திகள் ::
:: முன்னணி இந்தியச்செய்திகள் ::
:: உலகச்செய்திகள்::
|
"டுவிட்டர்' தணிக்கை திட்டம்: புறக்கணிக்க மக்கள் முடிவு
:
|
|
 நியூயார்க்: சமூக வலைத் தளங்களில் புகழ்பெற்ற, "டுவிட்டர்' நிறுவனம், நாடுகளுக்கு ஏற்றாற்போன்ற தணிக்கை முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளதையடுத்து, அந்த சமூக வலைத் தளத்தைப் புறக்கணிக்கப் போவதாக, மக்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்தியாவில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவைப் பற்றி, கிண்டலான செய்தி, இணையதளம் ஒன்றில் வெளிவந்தது. இதையடுத்து, கூகுள், யாகூ உள்ளிட்ட இணைய நிறுவனங்களும், "பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைத் தளங்களும், தங்களுக்கு வரும் செய்திகளை, இந்திய சட்டப்படி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், ...
|
|
வரலாறு படைத்தார் பயஸ்: ஆஸி., ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன்
:
|
|
 மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பைனலில், இந்தியாவின் பயஸ்,39, செக் குடியரசின் ஸ்டெபானெக்,33, ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் இப்பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் பயஸ்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், மெல்போர்ன் நகரில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலுக்கு இந்தியாவின் பயஸ், செக் குடியரசின் ஸ்டெபானெக் ஜோடி முன்னேறியது. இதற்கு முன் 3 முறை பைனலுக்கு முன்னேறியும், ஒரு முறை கோப்பை பயஸ் ஜோடி வென்றதில்லை. இதில் இரு முறை (2006, 2011) அமெரிக்காவின் பாப், மைக் பிரையன் சகோதரர்களிடம் தோற்றது. ...
|
|
தேவையற்ற சிக்கன நடவடிக்கை வளர்ச்சியைத் தடுக்கும்
:
|
|
 டாவோஸ்: "பொருத்தமில்லாத சிக்கனச் செலவுகள், நாட்டின் வளர்ச்சியை தடை செய்யும். நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கைகளுள், சிக்கனமும் ஒன்று என்பதை நாம் உணர வேண்டும்' என, சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்.,) தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் தெரிவித்துள்ளார்.யூரோ மண்டல பொருளாதார நெருக்கடியால் மோசமாக பாதிக்கப் பட்டுள்ள கிரீஸ், ஸ்பெயின் நாட்டு அரசுகள், தங்கள் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் விதத்தில், வேலைக் குறைப்பு, வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகள், அந்நாடுகளில் மக்கள் மத்தியில் பெரும் ...
|
|
இதய நோய்க்கான மருந்தில் கலப்படம் பாகிஸ்தானில் 100 பேர் பலி
:
|
|
 லாகூர்:இதயநோய் சிகிச்சைக்கு பயன்படும் முக்கியமான மருந்தில் கலப்படம் செய்யப்பட்டதால், மூன்று வாரங்களில் 100 பேர் இறந்துள்ளனர். இம்மருந்து சாப்பிட்ட 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருந்தை தயாரித்த நிறுவனங்களைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தான் லாகூரில் டெங்கு காய்ச்சல் காரணமாக, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலருக்கும் இந்நோய் இதயத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இவ்வாறு இதயநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக குறிப்பிட்ட மருந்து ...
|
:: விளையாட்டுச்செய்திகள் - லங்காசிறி இணையம் ::
:: சினிமா செய்திகள் தருவது விடுப்பு.கொம்[Viduppu.com]::
::தொழில் நுட்பச்செய்திகள் ::
|